

இதே போன்ற சம்பவம் ஒன்றில் மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் 17 லட்ச ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளார். தொழில்நுட்ப வல்லுநரான இவருக்கு 42 வயதாகிறது. பிரபலமான ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இவரை, பகுதி நேர வேலை தருவதாக கூறி ஆகஸ்ட் மூன்றாம் தேதி அன்று மோசடிக்காரர்கள் அணுகியுள்ளனர்.
மோசடி நபர்களின் வலையில் சிக்கினார்…
பாதிக்கப்பட்ட நபர் ஐடி நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கினாலும், கூடுதலாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஆன்லைனில் ஏதாவது பகுதி நேர வேலை இருக்கிறதா என தேடியுள்ளார். அந்த சமயத்தில்தான், அதாவது சரியாக அகஸ்ட் 3-ம் தேதி அன்று, ஹோட்டல் அறைகள் புக் செய்வது தொடர்பான பகுதி நேர வேலை இருப்பதாக கூறி இவரை ஒரு ஆணும், பெண்ணும் தொடர்பு கொள்கின்றனர். அதன்பின்னர் இந்த வேலைக்கான லிங்கை டெலிகிராம் செயலி மூலம் அனுப்பும் மோசடிக்காரர்கள், வேலையில் பதிவு செய்வதற்காக முதலில் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என இவரிடம் கேட்டுள்ளனர்.
இவரும் மறுக்காமல் அந்த தொகையை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் பலமுறை ஒவ்வொரு காரணம் கூறி இவரிடம் தொடர்ந்து பணம் பறித்துள்ளனர். இந்த வேலையின் மூலம் மிக எளிதாக சம்பாதிக்கலாம் என்று கூறியே, அவரிடம் இருந்து மட்டும் ரூ.17.28 லட்ச ரூபாயை ஏமாற்றியுள்ளனர்.
பணம்தான் செலவாகிறதே தவிர வருமானம் ஒன்றும் வந்தமாதிரி இல்லையே என உஷாரான ஐடி ஊழியர், மோசடிக்காரர்களிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே, தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். உடனடியாக காவல்நிலையத்திற்குச் சென்று இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
மோசடிகளிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?
இப்படி ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். முதலாவது, ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்க்க வேண்டும் என ஆர்வம் இருந்தால், லிங்க்டின், இண்டீட், நாக்ரி போன்ற நம்பகமான தளங்களில் வரும் வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இல்லை, நான் வேறு வழியில் விண்ணப்பம் செய்யப் போகிறேன் என்றால், இந்த வேலை குறித்து உங்களிடம் சொன்ன நபரை நன்றாக விசாரியுங்கள். அவருடைய பெயர், வேலை தரும் நிறுவனத்தின் பெயர் போன்ற விபரங்களை அவரிடம் கேளுங்கள். மேலும், அந்தப் பெயரில் உள்ள நிறுவனம் உண்மையானதுதானா, பகுதி நேர வேலை அந்த நிறுவனத்தில் இருக்கிறதா போன்ற விபரங்கள் அனைத்தையும் எளிய கூகுள் தேடுதல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்து, உங்கள் பெயர், போன் நம்பர், முகவரி போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களை கொடுக்கும் போது கவனமாக இருங்கள், நீங்கள் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் நம்பகமாக தளங்களில் மட்டும்தான் பதிவு செய்யப்படுகிறது என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
முடிவாக, தெரியாத நபர்களின் வங்கி கணக்குகளுக்கு எக்காரணம் கொண்டும் எதற்காகவும் பணம் அனுப்பாதீர்கள். அதுமட்டுமின்றி உங்கள் வங்கி கணக்கின் பாஸ்வேர்டு போன்ற விவரங்களை யாரிடமும் கொடுக்காதீர்கள். வேலையில் ஒருவரை நியமிக்க எந்தவொரு நம்பகமான நிறுவனமும் பணம் கேட்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments