
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வி.மேட்டூர் பகுதியில் முகம் தெரியாத நபர் ஒருவர் பெண்களின் புகைப்படங்களை வைத்து போலி பேஸ் புக் மற்றும் ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி ஆபாசமாக சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த போலி கணக்குகள் மூலம் ஆபசமாக பேசி, அந்த புகைப்படங்களையும் பேஸ் புக்கில் அந்த நபர் பகிர்ந்துள்ளார். இவற்றை கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசன் தான் இதுபோன்ற போலி கணக்குகளை உருவாக்கி ஆபசமாக பேசிவந்தது தெரியவந்தது.
இந்நிலையில் முருகேசனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது திடீரென காவல் நிலையம் முன்பு திரண்ட பொதுமக்கள் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் நடத்திய சமரசத்தில் உடன்பாடு எட்டாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மூத்த வழக்கறிஞர் பா.பா. மோகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தீவிர விசாரணைக்குப் பிறகு முருகேசன் மீது போக்சோ சட்டம் பாயும் என உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பெண்களின் பெயரில் போலியாக முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திய இளைஞரை கைது செய்து போலீசார், குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
SOURCE:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments