Ticker

6/recent/ticker-posts

70 ஆண்டுகளாக இரும்பு நுரையீரலுடன் வாழும் அதிசய மனிதர்!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் பால் அலெக்சாண்டர் தனது 6 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். 

 
இதனால் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் அவரின் கழுத்துக்கு கீழ்பகுதி முழுமையாக செயலிழந்தது. இதனால் மூச்சு விட மிகவும் சிரமப்பட்டு வந்ததால் உறவினர்கள் அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இந்த நிலையில் அங்கிருந்த ஒரு மருத்துவர் அவருக்கு ‘Tracheostomy’ என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அப்போதுதான் பால் அலெக்சாண்டருக்கு சிலிண்டர் வடிவிலான ‘இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 18 மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இந்த இரும்பு நுரையீரலோடு வெளியே செல்ல முடியாது என்பதால் ‘frog breathing’ என்ற முறையை அவர் கையாண்டார்.

கிட்டத்தட்ட சவப் பெட்டி போல வடிவமைக்கப்பட்ட அந்த இரும்பு நுரையரலுடன் வாழ்வது என்பது மிகவும் கொடுமையானது. அந்த வாழ்க்கையைத் தான் அலெக்சாண்டர் வாழ்ந்து வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கைப் பயணத்தை மிட்ச் சம்மர்ஸ் என்பவர் ஒரு சிறிய ஆவணப்படமாக தயாரித்தார். அதில் பால் அலெக்சாண்டர் கூறியதாவது, “என்னுடைய நிலையை கண்டு அனைவரும் என்னை வெறுத்தனர். என்னுடன் பேசவே தயங்கினர். நான் பள்ளி படிப்பை முடித்த பின், எனது நிலைமை கண்டு கல்லூரியில் என்னை சேர்க்கவில்லை. 2 வருடங்கள் கழித்து பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு கல்லூரில் சேர்ந்து வழக்கறிஞராக பட்டம் பெற்றேன். பின்னர் சில வரலாற்று புத்தகங்களை எழுதினேன். மேலும் உங்களுடைய கடந்தகால இயலாமையை நினைத்து யாரும் வருத்தப்படாதீர்கள். ஏனேனில், அதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன்” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இரும்பு நுரையீரலால் சுவாசித்தாலும், அலெக்சாண்டரை அவ்வப்போது இரும்பு நுரையீரலுக்குள் இருந்து விடுவித்து சாதாரணமாக சுவாசிக்க வைக்கும் முயற்சியிலும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் நீண்ட நேரத்திற்கு அலெக்சாண்டரால் சுவாசிக்க முடியவில்லை. அவருக்கு உடலியல் பயிற்சி கொடுத்து வரும் சல்லிவன் அலெக்சாண்டருக்கு போதிய தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறார். வெண்டிலேட்டர் உதவியில்லாமல் மூன்று நிமிடங்களுக்கு தானாக சுவாசித்தால் அழகிய நாய்குட்டி ஒன்றை பரிசலிப்பதாக சல்லிவன் கூற, அந்த சவாலில் வென்று ஒரு நாய்க்குட்டி பரிசாகப் பெற்று நாய்க்கு ஜிஞ்சர் எனப் பெயரிட்டுள்ளார்.

அலெக்சாண்டர் வாயில் இருக்கும் ஒரு குச்சி போன்ற சாதனத்தை பயன்படுத்தித் தான் 155 பக்கங்கள் கொண்ட தனது நினைவுக் குறிப்புகள் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தின் பெயர் Three minutes for Dog-My life in an Iron Lung. வழக்கறிஞரான பால் அலெக்சாண்டர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலி மூலம் நீதிமன்றம் சென்று வாதாடியும் இருக்கிறார். திடமாக சுவாசிக்கும் திறன் கொண்ட லட்சக் கணக்கானோரை கொரோனா காவு வாங்கிய போதும், இரும்பு நுரையீரல் மூலம் சுவாசிக்கும் பால் அலெக்சாண்டார் உயிர் பிழைத்தது அதிசயம் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

77 வயதான பால் அலெக்சாண்டர் தான் இந்த உலகில் இரும்பு நுரையீரலுடன் வாழும் கடைசி மனிதன் ஆவார். செயல்படாமல் இருக்கும் நுரையீரலுக்கு செயற்கையாக வெளியில் இருந்து அழுத்தம் கொடுத்து, அதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்து காற்றை சுவாசிக்கச் செய்யும் ஒரு வடிவமைப்புதான் இரும்பு நுரையீரல் என்பது. இது 1920 ஆம் ஆண்டுகளிலேயே போலியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. அப்படி  இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டவர்களின் நுரையீரல் ஒன்றிரண்டு வாரங்களிலேயே சாதாரணமாகிவிடும். உடனே இரும்பு நுரையீரலை அகற்றி விடுவார்கள் ஆனால் பால் அலெக்சாண்டர் 77 ஆண்டுகளாக இந்த இரும்பு நுரையீரலுடனேயே வாழ்ந்து வருகிறார்.

SOURCE:news18


 



Post a Comment

0 Comments