Ticker

6/recent/ticker-posts

கடைசி ஓவரில் விக்கெட் மெய்டன்.. பும்ரா, பிரசித் வேகத்தில் பணிந்த அயர்லாந்து.. தொடரை வென்று அசத்தல்!


டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. 
அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஸ்டெர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், சஞ்சு சாம்சன் 40 ரன்களும், ரிங்கு சிங் 38 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி, பிரசித் கிருஷ்ணா வீசிய 3வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் சிக்கியது. கேப்டன் ஸ்டெர்லிங் மற்றும் டக்கர் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து வந்த டெக்டரும் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அயர்லாந்து அணியால் 10 ஓவர்கள் முடிவில் 63 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்பின் தொடக்க வீரர் பால்பர்னி ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

சிவம் துபே வீசிய ஓவரில் 2 சிக்சர்களை விளாசிய பால்பர்னி, ரவி பிஷ்னாய் வீசிய ஓவரில் பவுண்டரியை விளாசி அரைசதம் அடித்தார். இதனால் 14 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 102 ரன்கள் சேர்த்தது. இதனிடையே 15வது ஓவரில் இரு ரன்கள் ஓட ஆசைப்பட்டு அதிரடி வீரர் டாக்ரெல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய பால்பர்னியும் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அயர்லாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 62 ரன்கள் தேவையாக இருந்தது.

தொடர்ந்து பும்ரா பந்துவீச்சில் மெக்கர்தி 2 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்து மெய்டன் செய்து அசத்தினார். இறுதியாக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

SOURCE:mykhel


 



Post a Comment

0 Comments