
மத்தியப்பிரதேச மாநிலம் பலோடா அர்சி கிராமத்தில் வசித்தவர்திலீப் பன்வார் (45 ) என்பவர் தந்தது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றையும் வளர்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திலீப் பன்வார் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரின் நடவடிக்கையாளல் அவர்கள் வீட்டில் வளரும் நாய் அவரைப் பார்த்து குறைத்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் கத்தியை எடுத்து நாயை கொல்ல முயன்றுள்ளார்.
இதற்குள் சத்தம் கேட்டு அங்கு வந்த திலீப் பன்வாரின் மனைவி கங்காபாய் கணவரின் செயலை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், மதுபோதையில் மனைவி என்றும் அவரை தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் அங்கு வந்த தனது 4 மகன்களையும் அவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில் இரண்டு குழந்தைகள் மட்டும் பலத்த காயங்களோடு அங்கிருந்த தப்பி அக்கம் பக்கத்தினரிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதனிடையே மனைவி மற்றும் குழந்தைகளை கத்தியால் குத்திய திலீப் பன்வான் தனது கழுத்தை தானே வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது திலீப் பன்வார், அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டநிலையில் , இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
SOURCE:kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments