Ticker

6/recent/ticker-posts

பிரபல கிரிக்கெட் வீரர் மீது சூதாட்ட புகார்.. குற்றவாளி என தீர்ப்பளித்த விசாரணை ஆணையம்.. நடந்தது என்ன ?


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர் மர்லான் சாமுவேல்ஸ். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
அதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் கடந்த 019 ஆம் ஆண்டு இவர் அபுதாபி டி 10 லீக்கில் கலந்துகொண்டு விளையாடினார். அப்போது இவர் நிர்வாகத்துக்கு தெரியாமல், 750 டாலருக்கு மேல் பரிசு பொருளை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதிலும், பல முறை இதே போன்று பரிசு பெயரை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஐசிசியின் கிரிக்கெட் ஊழல் தடுப்பு விதியின் படி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் 750 டாலருக்கு மேல் பரிசு பொருளை பெற்றது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் என்பதால் இது சூதாட்டமாக கருதப்பட்டது.

இது குறித்த விசாரணைக்கு மர்லான் சாமுவேல்ஸ் ஒத்துழைப்பு கொடுக்காமலும் இருந்துள்ளார். இதன் காரணமாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

அதன்படி மர்லான் சாமுவேல்ஸ் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக இவருக்கு சில ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மர்லான் சாமுவேல்ஸ் ஏற்கனவே ஊழல் புகார் காரணமாக இரு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE:kalaignarseithigal


 



Post a Comment

0 Comments