

இதன்போது, இலங்கையின் கண்டி மாவட்டத்தின் வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த, மாவனல்லை ஜே.எம் மீடியா கல்லூரியின் ஒன்பதாவது குழு மாணவனான ஹூபைப் முஸம்மிலின் புகைப்படம் தெரிவு செய்யப்படுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
தன் சிறு வயதிலிருந்தே புகைப்பட துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், பல போட்டிகளிலும் பங்கு பற்றியுள்ளார். மட்டுமன்றி, இந்திய திரை உலக பிரபலங்களும் இணைந்த மிக பிரம்மாண்டமான நிகழ்வான "தமிழ் மகன்" விருதில் புகைப்பட கலைஞராகவும் பணியாற்றியுள்ளதாக அறிகின்றோம்!
ஸ்கை தமிழ் ஊடகத்தின் ஊடகவியலாளராகவும், புகைப்படபிடிப்பாளருமான இவர், தற்போது கத்தாரில் வடிமைப்பளாராக தொழில் புரிந்து வருவதோடு, தன் திறமையை புகைப்படத்துறையின் மூலமும் வெளிக்காட்டி வருகின்றார்.
சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்புகைப்பட போட்டியில் பிரதானமாக முப்பது புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் கத்தார் அபு ஹமூரில் உள்ள சபாரி மாலில் ஆகஸ்ட் 19 - 30 வரை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
இவரது எதிர்கால வெற்றிக்காக "வேட்டை"வாழ்த்துகின்றது!
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments