Ticker

6/recent/ticker-posts

எப்புட்றா.. இடியவே இடிச்சு தூக்கிட்டாங்க.. வரலாறு படைத்த ஐக்கிய அரபு அமீரகம்.. கண்ணீரில் நியூசி!


துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முதல்முறையாக வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

 
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் வாழ்வா சாவா போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணி களமிறங்கியது. சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால், ஏதாவது எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக கேப்டன் வாசீம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நட்சத்திர வீரர்களான செஃபெர்ட் 7 ரன்களிலும், சான்ட்னர் 1 ரன்னிலும், கிளெவர் டக் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த சாப்மேன் பொறுப்புடன் விளையாடினார். ஆனால் எதிர்முனையில் வந்த வீரர்களில் ஜேம்ஸ் நீஷமை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய நீஷம் 21 ரன்களிலும், சாப்மென் 46 பந்துகளில் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்து. தொடர்ந்து வந்த அரவிந்த் பொறுப்புடன் ஆடி 21 பந்துகளில் 25 ரன்கள் சேர்க்க, இன்னொரு பக்கம் கேப்டன் முகமது வாசீம் 29 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 55 ரன்கள் விளாசி தள்ளினார். பின்னர் வந்த ஆசிஃப் கான் 29 பந்துகளில் 48 ரன்களும், பேசில் ஹமீத் 12 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர்.

இறுதியாக ஐக்கிய அரபு அமீரக அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை முதல்முறையாக வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரகம் அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டி20 தொடரும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

SOURCE:mykhel


 



Post a Comment

0 Comments