Ticker

6/recent/ticker-posts

Wagner படைத்தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் விமான விபத்தில் மரணம்: ரஷ்யா


(படம்: Investigative Committee of Russia/Handout via REUTERS)

ரஷ்யாவின் Wagner துணை ராணுவப் படைத்தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் (Yevgeny Prigozhin) விமான விபத்தில் மாண்டதாக அந்நாட்டு சிவில் ஆகாயப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

மாஸ்கோவிலிருந்து (Moscow) செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St Petersburg) நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

பிரிகோஷின் உட்பட அதில் 10 பேர் இருந்தனர் என்றும் யாரும் பிழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் அதிகாரபூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பிரிகோஷினுக்குச் சொந்தமான அந்தத் தனியார் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதாக Wagner துணை ராணுவப் படையுடன் தொடர்புடைய Gray Zone குழு தெரிவித்தது.

ரஷ்யாவின் துரோகிகள் திரு. பிரிகோஷினைக் கொன்றுவிட்டதாக அது கூறியது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமாக இருந்த பிரிகோஷினின் துணை ராணுவப் படை, உக்ரேனில் பல வட்டாரங்களைக் கைப்பற்ற உதவியது.

ஆனால் பின்னர் புட்டினுக்கும் பிரிகோஷினுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிகோஷின் ரஷ்யப் படைகளுக்கு எதிரான கிளர்ச்சியை வழிநடத்தினார்.

அவர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டைச் சுமத்தப்போவதாகவும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அப்போது மிரட்டல் விடுத்திருந்தார்.

அதன் பின்னர் பெலருஸிற்குச் சென்றிருந்த பிரிகோஷின் அந்நாட்டு அதிபரின் உதவியோடு ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது.

அதன் கீழ் பிரிகோஷின் பெலருஸில் வசிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் மீட்டுக்கொள்ளப்பட்டன.

எனினும் அவர் மீண்டும் ரஷ்யாவிற்குத் திரும்பினார்.

திரு புட்டினால் பிரிகோஷினின் உயிருக்கு ஆபத்து ஏதும் கிடையாது என்று பெலருஸ் அதிபர் அப்போது தெரிவித்திருந்தார்.


Source:AGENCIES


 



Post a Comment

0 Comments