Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு : சனல் 4 வெளியிடவுள்ள அதிர்ச்சி தகவல்கள்..!


இலங்கை மக்களை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட உள்ளது சனல் 4 ஊடகம்.
 
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளனர், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, போன்ற பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிடப்போகிறது அந்த ஊடகம்.

பிள்ளையானின் தொடர்பு

குறிப்பாக இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திர காந்தனின் தொடர்பும் இதில் பேசப்பட்டுள்ளது.

இதனை தெரிவித்தவர் பிள்ளையானின் முன்னாள் கூட்டாளியும் தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளவருமான ஆசாத் மௌலானா என்பவரேயாவார்.
இதன்படி பிள்ளையான் சிறையில் இருந்த காலத்தில் குண்டு தாக்குதல் நடத்திய சிலருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாக மௌலானா தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான ஏற்பாடு

இந்த கடும் போக்குடைய கும்பலை பயன்படுத்தி கொலைகளை மேற்கொள்ள முடியும் என அடையாளம் கண்டு கொண்டதாக மௌலானா குறிப்பிடுகின்றார்.

மேலும், பிள்ளையானும் சுரேஷ் சாலேயும் இணைந்து குறித்த குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றவாளிகள் உலக விவகாரங்களில் நாட்டமற்றவர்கள் எனவும் இவர்களை தங்களுடைய தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பிள்ளையான் கூறியதாக மௌலானா கூறுகிறார்.

பிரித்தானிய ஊடகமான டைம்ஸ் 
இந்த தாக்குதல் சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிள்ளையானுடனும், ராஜபக்சர்களிடமும் தகவல்களை பெற்றுக்கொள்ள எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என சனல்-4 நிறுவனம் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகமான டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படி இருந்த போதிலும் நாளையதினம் சனல் 4 வெளியிடப்போகும் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தெரியவந்துவிடும்

Source:ibctamil


 



Post a Comment

0 Comments