Ticker

6/recent/ticker-posts

பொசுக்குன்னு "அங்கே" நுழைந்து.. பெஞ்சில் உட்கார்ந்த மேயர் பிரியா.. "இதென்ன" இப்படி இருக்கு.. ஒரே போடு


சென்னை: சென்னை மேயர் பிரியாவின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. திடீரென ஒரு கிளாஸ் ரூமுக்குள் சென்றுவிட்டாராம் பிரியா.. அப்பறம் என்னாச்சு தெரியுமா? 
சமீபகாலமாகவே, பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து வருகிறார் மேயர் பிரியா.. மிக பொறுப்புடன் சென்னையின் நலனில் அவர் காட்டி வரும் அக்கறை, சென்னைவாசிகளிடம் பரவலாக வரவேற்பையும் பெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் மழை வெள்ளத்தின்போது, நள்ளிரவு என்றும் பாராமல் ஸ்பாட்டுக்கு சென்று ஆய்வு நடத்தியதாகட்டும், மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை மாநகராட்சி ஆணையருடன் சேர்ந்து எடுத்ததாகட்டும், எல்லாமே ஜரூர் வேகத்தில் நடந்தன..

சில மாதங்களுக்கு முன்பு வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை தீவிரப்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய சாலையில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை என்ற பாராட்டு திமுக அரசுக்கும் கிடைத்து வருவதை மறுக்க முடியாது

குடைக்குள் மழை எந்த அளவுக்கு மேயர் பிரியாவுக்கு வரவேற்புகள் இருக்கிறதோ, அதே அளவுக்கு சோஷியல் மீடியாவில் பரபரப்புகளும் தொற்றி கொண்டு வருகின்றன.. எத்தகைய விமர்சனங்கள் தன்மீது எழுந்தாலும், அத்தனையையும் அசால்ட்டாக கடந்து சென்று வருகிறார் பிரியா.. எனினும், மேயர் பிரியாவின் அதிரடி ஆய்வுகள் கடந்த காலங்களில் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.. இப்படித்தான், கடந்த மாதம், ராயபுரம் பகுதியில் உள்ள சமையல் கூடத்திற்கு ஆய்வுக்கு சென்றுள்ளார்... அதுவும் காலை 6 மணிக்கே சென்றுள்ளார்.. திடீரென அந்த கிச்சனுக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த ஊழியர்கள் பரபரப்பாகிவிட்டார்கள்..

கிச்சன் டிபன் கிச்சனில் நுழைந்த பிரியா, அந்த வளாகம் எப்படி இருக்கிறது? பாத்திரங்கள் சுத்தமாக இருக்கின்றனவா? சமையல் செய்யும் முறை எப்படி? உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது? என்றெல்லாம் நேரடியாகவே ஆய்வு செய்தார்.. பின்னர் அருகிலுள்ள பள்ளிக்கு சென்ற பிரியா, மாணவர்களிடம் சிற்றுண்டி பற்றி கேள்வி எழுப்பினார். டிபன் நல்லா இருக்கா? சரியான நேரத்துக்கு டிபன் கிடைக்கிறதா? ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? ஏதாவது குறைகள் இருக்கா? என்று மாணவர்களின் பதிலை கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு, திடீரென ஒரு ஸ்பூனில் கிச்சடியை எடுத்து டேஸ்ட் செய்து பார்த்தார்..

பதார்த்தம் யதார்த்தம் பின்னர், அங்கிருந்த ஊழியர்களிடம் காலை டிபனில் சட்னி அல்லது சாம்பார் இப்படி எதாவது சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும். அதை செய்வதற்கு வழி இருக்கிறதா? என்று பாருங்கள் என்று சொல்லிவிட்டு போனார்.. இப்போதும் அப்படித்தான் ஒரு திடீர் ஆய்வுக்கு சென்றுள்ளார்.. திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆய்வை பிரியா மேற்கொண்டார்.. மங்களாபுரம் பகுதியில் பழுதடைந்த பஸ் ஸ்டாப் நிழற்குடையினை மாற்றி ரூ.16.61 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை அமைப்பது குறித்தும், வாழைமா நகரில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் இறகுப்பந்து மைதானம் அமைப்பது குறித்தும், இந்த ஆய்வினை மேயர் பிரியா மேற்கொண்டார்

கிளாஸ்ரூம் அதற்கு பிறகு, வாழைமா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்திலும், கிருஷ்ணாதாஸ் சாலையில் உள்ள தொடக்கப்பள்ளியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் புதிதாக அமைப்பது குறித்தும், குக்ஸ் சாலையில் சென்னை உயர்நிலைப்பள்ளியில் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டிடப் பணிகள் குறித்தும் நேரிலேயே பார்வையிட்டு ஆய்வு செய்தார்... இப்படி ஆய்வு செய்து கொண்டே வந்தவர், திருவிக நகர் அரசு பள்ளிக்குள் நுழைந்துவிட்டார்.. அங்கே கிளாஸ்ரூம்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி கொண்டிருந்தார்கள்..

பெஞ்சில் பிரியா அதில் ஒரு கிளாஸ் ரூமுக்குள் சட்டென நுழைந்த பிரியா, மாணவ, மாணவிகளுடன் பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டார். மாணவ, மாணவிகள், மேயர் பிரியாவை பார்த்ததுமே திகைத்து போய்விட்டனர்.. எனினும், ஆசிரியர்கள் பாடத்தை தொடர்ந்து நடத்தி கொண்டிருந்தனர்.. அவர்கள் நடத்தும் பாடத்தை பிரியாவும் கவனித்தார்... பிறகு, சிறந்த முறையில் எல்லா பாடங்களும் நடத்தப்படுகிறதா? என்று பக்கத்தில் இருந்த மாணவர்களிடம் கேட்டறிந்தார்..

ஹோம் ஒர்க்ஸ் தினமும் ஹோம் ஒர்க் தருகிறார்களா? என்னென்ன தருகிறார்கள? அதையெல்லாம் நீங்கள் செய்து முடித்துவிடுகிறீர்களா? ஹோம் ஒர்க்குகளை டீச்சர்கள் சரிபார்க்கிறார்களா? என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.. பிறகு, அங்கிருந்த மாணவர்களின் நோட்டை வாங்கி பார்த்த பிரியா, கையெழுத்து என்ன இப்படி இருக்கு? கையெழுத்து விஷயத்தில் ஸ்பெஷல் கவனம் தரணும் என்றும் அட்வைஸ் செய்துவிட்டு கிளம்பினார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!!!

SOURCE:oneindia


 



Post a Comment

0 Comments