Ticker

6/recent/ticker-posts

இந்தியா - பாரத்: உலகளவில் பெயரை மாற்றிக்கொண்ட நாடுகளின் லிஸ்ட்..!!

இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் இன்று காலை முதல் பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு அனுப்பப்பட்டது. பொதுவாக அரசு அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்களில் இந்தியா என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இன்று வெளியான ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்களில் 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பிரசிடெண்ட் ஆஃப் பாரத்' என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான விவாதத்தை உருவாக்கி உள்ளது.

பிஜேபி எப்படி 'இந்தியா' என்ற பெயரை நீக்க முடியும்? நாடு ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானது அல்ல; இது 135 கோடி இந்தியர்களுக்கு சொந்தமானது. இந்தியா என்பது நமது தேசிய அடையாளம் விருப்பத்தின் பேரில் மாற்றியமைக்க பிஜேபி-யின் தனிப்பட்ட சொத்து அல்ல என ராகவ் சந்தா என்பவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உலகளவில் பெயரை மாற்றிக்கொண்ட நாடுகளின் பட்டியலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். இதோடு ஒரு நாடு எதற்காக தனது பெயரை மாற்றிக்கொள்கிறது என்பதற்கான காரணத்தையும் இப்போது பார்ப்போம். உலகில் பல நாடுகள் தங்கள் பெயர்களை மாற்றுவதற்கு மிகவும் முக்கியமானதாகவும், பொதுவான காரணமாகவும் இருப்பது பிரிட்டன் காலனித்துவ அடித்தளத்தை அகற்றி சொந்த கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் பெயரை பெற வேண்டும் என்ற இலக்குடன் நடக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல நாடுகள் சுதந்திரமடைந்து, தங்கள் சொந்த கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் தங்கள் நாட்டின் பெயரை மாற்றி கொண்டது. ஐரோப்பியர்களாலும், பிரிட்டன் நாட்டினராலும் திணிக்கப்பட்ட பெயர்களை மொத்தமாக கைவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பெயர் மாற்றம் நடக்கிறது. உதாரணமாக, 1972 இல் பிரிட்டன் ஆட்சியில் இருந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா "Democratic Socialist Republic of Sri Lanka" என மாறியது, ஆனாலும் 2011 வரை காலனித்துவ பெயரான சிலோன் என்பதையே பல அரசு ஆவணங்களிலும் பயன்படுத்தியது. ஆனால் 2011க்கு பின்பு மொத்தமாக நிறுத்தியது.

இதேபோல் சமீபத்தில் அதாவது ஜூன் 2 ஆம் தேதி ஐநா துருக்கி (Turkey) நாட்டின் பெயரை Türkiye என மாற்றியதை அங்கிகாரப்படுத்தியது. "Türkiye என்ற பெயரே துருக்கி மக்களின் கலாச்சாரம், நாகரீகம் மற்றும் மதிப்புகளின் சிறந்து பிரதிநிதித்துவப்படுத்தி வெளிப்படுத்துகிறது என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கடந்த டிசம்பரில் அந்நாட்டின் அரசு பெயர் மாற்றம் குறித்த குறிப்பை வெளியிட்டபோது கூறினார். இப்படி ஹாலந்து - The Netherlands ஆக மாறியது, 2019ல் Republic of Macedonia என்ற நாடு Republic of North Macedonia ஆக மாறியது, 2018 ஏப்ரல் மாதம் Swaziland என்ற பெயர் Eswatini ஆக மாறியது, 2016ல் செக் குடியரசு Czechia ஆக மாற்றப்பட்டது.

2013ல் Cape Verde என்ற பகுதி Cabo Verde ஆக மாறியது, இதேபோல் பர்மா Myanmar ஆக மாறியது, Republic of Yugoslavia ஆக இருந்த பெயர் croatia ஆக மாறியது, மத்திய ஐரோப்பிய பகுதியில் இருக்கும் Carniola என்ற பகுதி Slovenia ஆக மாறியது.

Source:goodreturns


 



Post a Comment

0 Comments