
கொழும்பு: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் சமரவிக்ரமா 93 ரன்களும், குசல் மெண்டிஸ் 50 ரன்களும் விளாசினர்.
வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் மற்றும் ஹசன் மஹ்முத் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் வங்கதேசம் அணி 259 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு முகமது நைம் - மெஹதி ஹசன் மிராஸ் இருவரும் சேர்ந்து 55 ரன்கள் சேர்த்தனர். இந்த நிலையில் மெஹதி ஹசன் மிராஸ் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து முகமது நைம் 21 ரன்கள் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர்கள் இருவரையும் இலங்கை அணி கேப்டன் ஷனகா வீழ்த்தி அசத்தினார். பின்னர் வந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 70 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் லிட்டன் தாஸும் 15 ரன்களில் வெளியேற, ஆட்டத்தில் இலங்கை அணியின் கைகள் ஓங்கியது. பின்னர் அனுபவ வீரர் ரஹிம் - ஹிர்தாய் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் ஹிர்தாய் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்த, இன்னொரு பக்கம் ரஹிம் விக்கெட்டை காத்து நின்றார். ஆனால் மீண்டும் கேப்டன் ஷனகா பந்தில் ரஹிம் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஷமிம் ஹொசைன் 5 ரன்களில் வெளியேறினார். ஆனால் சிறப்பாக ஆடிய ஹிர்தாய் அரைசதம் கடந்து அதிரடியாக ஆட தொடங்கினார். ஆனால் தீக்சனா பந்தில் அவரும் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, வங்கதேச அணியின் நம்பிக்கை தகர்ந்தது.
பின்னர் வந்த வீரர்கள் நசும் அஹ்மத் 15 ரன்கள் சேர்த்த நிலையில், ஹசன் 10 ரன்கள் சேர்த்தார். இறுதியாக வங்கதேச அணி 48.1 ஓவர்களிஉல் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இலங்கை அணி தரப்பில் ஷனகா, தீக்சனா மற்றும் பதிரானா மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு பின் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
Source:mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments