Ticker

6/recent/ticker-posts

விண்ணகத்தில் சாதனை!

 

சந்திரயான் -3;ஆதித்யா L1
வாழ்த்துப்பாடல்!

சந்திர யானின் மூன்றிங்கே
நிலவின்  தெற்குப் பகுதியிலே
பாது காப்பாய்க் கால்பதித்தே
ஆய்வைத் தொடங்கி இயங்குதம்மா!

சாதனை நாடாய் இந்தியாதான்
உலகில் உயர்ந்தே நிமிர்கிறது!

ஆதித் யாஎல்  ஒன்னின்று
சூரியன் ஆய்வை மேற்கொள்ள
சிரிகரி கோட்டா களமிருந்தே
அருமையாக விண்ணகத்தில்
பாய்ந்தே செல்லும் காட்சியினைக்
கண்டே களித்து ரசித்திருந்தோம்!

இந்திய நாட்டின் அறிவியலோ
விண்ணைத் தொட்டே நிமிர்கிறது!

இன்னும் சாதனை நாட்டித்தான்
இங்கே புகழ்க்கொடி ஏற்றிடுவோம்!

அறிவியல் வல்லுநர் குழுவிற்கு
வாழ்த்தைக் கூறி மகிழ்ந்திடுவோம்!

மதுரை பாபாராஜ்
முகவரி:
பிரார்த்தனா சி1
குரோவ் அடுக்ககம்
இணைப்புச்சாலை
ஆதம்பாக்கம்
சென்னை 600088
தமிழ்நாடு


 



Post a Comment

0 Comments