கூனிக் குறுகாதே!
உன்னுள் வேகமுண்டு
உதிரத்தில் வீரமுண்டு!
நதிபோலப் பாய்ந்திடு
நாசங்கள் சாய்த்திடு!
விதியென்று முடங்காதே
வேங்கையாய்ச் சீறிடு!
சதிகாரர் வலையறு
சாகசம் புரிந்திடு!
எதிரிக்கு உன்னெழுச்சி
எரிமலை உக்கிரம்!
உரிமைகள் காத்திட
எரிதழல் ஏந்திடு!
கடமைகள் நிறைவேற்று
கனலாய்க் கொதித்திடு!
அச்சத்தை அகற்றிடு
அனல்பாதை தேர்ந்தெடு!
முகில் தினகரன்,
கோயமுத்தூர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments