திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -26

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -26


குறள் 1168 
மன் யிர் எல்லாம் துயிற்றி அளித்திரா  
என்னல்லது இல்லை துணை. 

இரவே! இரவே! 
உன்னைப் பார்த்தால் 
பாவமாக இருக்கிறது! 
உலகத்தையே 
உறங்கச் செய்துவிட்டு 
என்னைத் தவிர உனக்கு 
வேறுதுணை இல்லாமல் 
இருக்கின்றாய்! நீ. 

குறள் 1169 
கொடியார் கொடுமையின் தாம்கொடிய 
விந்நாள்  நெடிய கழியும் இரா. 

ஊருக்குப்போன 
அப்பா 
நாளை காலை 
வந்திடுவார்! 
இந்த இரவோ 
மெல்ல மெல்ல 
அன்னநடை போட்டு 
நகர்கிறது! 
இதுகழியும் கொடுமை 
இருக்கிறதே 
அப்பா தந்த
ஏக்கத்தை விட 
பெருங்கொடுமையாய் 
உள்ளது. 

குறள் 1170 
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் 
வெள்ளநீர்  நீந்தல மன்னோஎன் கண். 

அம்மாடி! 
வாசல்ல ஏன் உட்காந்திருக்கே? 
உள்ளவா! 
பாட்டி வராங்களான்  
பாக்குறேம்மா! 
வருவாங்க! வருவாங்க! 
உள்ளவா! 
இல்லம்மா தாமதமாகுதா! 
கண்ல இருந்து தானாக 
கண்ணீர் வழியுதம்மா! 
இந்த மனசு மாதிரி வேகமாக 
போக  கண்களால முடியலே! 
அதான் அழுதுகிட்டே இருக்கு! 

குறள் 1171 
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ 
தண்டாநோய்  தாம்காட்ட யாம்கண் டது.

அக்கா அக்கா! 
பக்கத்துவீட்டு 
பாமா 
எனக்கு நல்லதோழிதான்! 
ஆனா 
அவங்க அப்பா  
ஒரிசாவுக்கு மாறுதலானதாலே 
எல்லோரும் அங்கே 
போயிட்டாங்க! 
இந்தக் கண்ணுதானே 
முதல்ல பாத்துநட்பை 
ஏற்படுத்தியது 
அதோட குற்றம்! 
இப்பவந்து 
பாமாவை 
காட்டு காட்டுன்  
அடம்பிடிச்சு அழுதா 
என்ன பண்றது? 
எனக்கு அதவிட வேதனை! 

குறள் 1172 
தெரிந்துணரா நோக்கிய உண்கண் 
பரிந்துணராப்  பைதல் உழப்பது எவன். 

நாம் பாட்டுக்கு தோட்டத்துல 
பூப்பறிச்சுக்கிட்டு 
இருந்தேன்! 
அப்ப அந்தச் சுவருக்கப்பால 
ஒருசிறுமி குதிச்சுக் குதிச்சு
ஓடுச்சு! 
இந்தக் கண்ணு சும்மாஇருக்கணும்ல! 
பாத்துருச்சு! வாய் கூப்பிட்டுச்சு! 
முகமோ சிரிச்சுச்சு! 
பேசினோம், பழகினோம்! 
நட்பு மலர்ந்துச்சு! 
ஒருவாரம் போனதே தெரியல! 
ஊரில் இருந்து அத்தை 
வீட்டுக்கு வந்து தங்கி 
காலையில நான் என்வீட்டுக்கு வந்துட்டேன்! 
அடுத்தநாள் கண்ணு பரபரன் து! 
தேடுது! என்ன நடக்கும்  தெரியாம 
கண்ணிருக்கே நட்பை உண்டாக்கிரும்! 
தன்னாலதான்  உணராம 
தவிக்க ஆரம்பிச்சுரும்! 
கண்களே நியாயமா? 

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post