Ticker

6/recent/ticker-posts

21-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)
 
17.நடு இருப்பு:

முதல் ஸுஜூதை முடித்த பின் நடு இருப்பில் அமர வேண்டும்.

‘நபியவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறியவர்களாக ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்துவார்கள்” (புஹாரி, முஸ்லிம்).

பின்னர் நடு இருப்பில் அமர்வார்கள். நபியவர்கள் இரண்டு முறைகளில் நடு இருப்பில் அமர்ந்திருக்கிறார்கள் :

1.’இடது பாதத்தை விரித்து அதன் மீது உட்காருவார்கள். வலது பாதத்தை நேராக நட்டிவைப்பார்கள். வலது கால்விரல்களை (மடக்கி) கிப்லாவை முன்னோக்கி வைப்பார்கள்” (புஹாரி,நஸாஈ). (இந்த இருப்புக்கு அரபியில் ‘இப்திராஷ்’ எனப்படும்).

2.’சில வேளைகளில் தமது இரு குதிகால்களின் மீது உட்காருவார்வார்கள்” (முஸ்லிம்). (இந்த இருப்புக்கு அரபியில் ‘இக்ஆஃ’ எனப்படும்.)

இந்த நடு இருப்பில் தாமதிப்பதும் அவசியமாகும்.

‘ நபிகளார் ஸுஜூதில் தாமதித்திருப்பது போன்ற அளவுக்கு இவ்விருப்பில் தாமதிப்பார்கள்’ (புஹாரி,முஸ்லிம்).

பின்வரும் துஆக்களை நபியவர்கள் இவ்விருப்பில் ஓதியிருக்கிறார்கள் :

رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ
”றப்பிஹ்பிர் லீ , றப்பிஹ்பிர்லீ ” (இப்னு மாஜஹ்).

றப்பிஹ்பிர் லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வர்பஃனீ வர்ஸுக்னீ வஹ்தினீ(முஸ்னத் அஹ்மத்).(சில ஹதீஸ் அறிவிப்புகளில் இந்த வாசகங்கள் சிறு மாற்றங்களோடு வந்திருக்கின்றன. அவையும்

ஆதாரபூர்வமானவை என்பதால் அவற்றையும் ஓதலாம்) .

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 


 



Post a Comment

0 Comments