Ticker

6/recent/ticker-posts

23-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)

20.இரண்டாவது றக்அத் :

இரண்டாவது றக்அத்துக்கு எழுந்ததும் தாமதிக்காமல் ஸுறா பாதிஹா ஓத வேண்டும். “நபியவர்கள் இரண்டாவது றக்அத்துக்கு வந்துவிட்டால் தாமதிக்காமல் ஸுறா பாதிஹா ஓத ஆரம்பித்து விடுவார்கள்” (முஸ்லிம், அபூஅவானா).

பின்னர் முதலாவது றக்அத்தை நிறைவேற்றியது போன்று இரண்டாவது றக்அத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

21.முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) :

இரண்டாவது றக்அத்தின் முடிவில் முதலாவது அத்தஹிய்யாத்துக்காக அமர்ந்து அத்தஹிய்யாத் ஓத வேண்டும்.

முதல் அத்தஹிய்யாத்துக்காக அமரும் போது பின்வருமாறு நபிகளார் அமர்வார்கள் :

‘இடது பாதத்தை விரித்து அதன் மீது உட்காருவார்கள். வலது பாதத்தை நேராக நட்டிவைப்பார்கள். வலது கால் விரல்களை (மடக்கி) கிப்லாவை முன்னோக்கிவைப்பார்கள்” (புஹாரி, நஸாஈ). (இந்த இருப்புக்கு அரபியில் ‘இப்திராஷ்’ எனப்படும்).

முதல் அத்தஹிய்யாத்தில் உட்கார மறந்து விட்டால்…

‘நபியவர்கள் முதல் அத்தஹிய்யாத்தில் அமர மறந்து விட்டால் (தொழுகையின் இறுதியில்) மறதிக்கான ஸுஜூத் செய்வார்கள்” (புஹாரி, முஸ்லிம்).

இனி..

21. முதலாவது அத்தஹிய்யாத் (தஷஹ்ஹுத்) :
22. இரண்டாவது அத்தஹிய்யாத் :
  • A.இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையில் அத்தஹிய்யாத்தில் அமரும் போது முதல் அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா,இரண்டாவது அத்தஹிய்யாத்தில் அமர்வது போன்று அமர்வதா?
23.முதலாவது மற்றும் இரண்டாவது அத்தஹிய்யாத்தின் போதான நடைமுறைகள் :
  • A.வலது கை சுட்டு விரலை வைத்திருக்கும் முறை :
24. அத்தஹிய்யாத் & ஸலவாத் மற்றும் துவாக்களை ஓதுதல்:

போன்றவற்றின் விரிவான சட்டங்களை   காணலாம்… 

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 


 



Post a Comment

0 Comments