பேருவளை சேஹ் ஜமால்த்தின் வீதியை மலர்ந்த இடமாகவும், சேகியூலர் வீதியை மறைந்த இடமாகவும் கொண்டு, மக்கள் மனதில் அன்பை ஆழ விதைத்து, பேருவளை மக்களை 20.03.2024 மாலை ஆழ்ந்த துயரில் அழ்திச் சென்றார் தோழர் ரபாய்தீன்.
பேருவளை சேஹ் ஜமால்தீன் வீதி அல்ஹாஜ் அப்துல் பத்தாஹ், ஹாஜியானி ஆயிசா தம்பதிகளின் புதல்வர் றபாய்தீன் 20. 03. 2024 மாலை அனைவரிடமிருந்தும் விடை பெற்றுச் சென்றார்.
இரத்தினக்கல் வியாபாரத்தை தொழிலாகக் கொண்டவர்.
உலகில் பகைமை என்பதை அறியாதவர், பகைக்கு அர்த்தம் தெரியாதவர்,
நட்பு சந்தோஷம் சிரிப்பு போன்றவற்றிற்கு பாடம் நடாத்தி முகவரி கொடுத்தவர்.
தெரிந்தவரோ தெரியாதவரோ அனைவரிடம் கலகலவென கலையாகவே போசும் சுபாவம் கொண்ட இனிமையானவர்.
கவலை, கோபம், இவரிடம் போட்டியிடடு தேல்வி கண்ட இவரின் இரு போட்டியாளர்கள். அவருக்கு நிகர் அவரே.
நட்பு என்பது அடிக்கும் அலைக்கு கரைந்து போக,கரை மீது எழுதும் எழுத்தல்ல, அடிமனதில் குத்தும் பச்சை,கல்லில் செதுக்கப்படும் வரிகள் என்பதை 20 ஆம் திகதி இரவு 12 மணி்க்கு பேருவளை மக்களின் கண்ணீரால் உலகிற்கு உணரவைத்தவர்.
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது என்ற வரிகளை அர்த்தம் விளங்கியதுவோ என்னவோ இளம் வயதில் அடுத்த சகோதரனுக்கு இம்மண்ணில் வாழ இடமளித்து, இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து 20.03.2024 இரவு 12 மணிக்கு இம்மண்ணின் நிரந்தரமான மாளிகைகையை பேருவளை சீனங்கோட்டை ஜும்ஆ பள்ளி மையவாடியில் அமைத்துக் கொண்டாய்.
"உன் வாழ்கை எந்தளவு குறுகியதோ அதேபோல்
உன் ஜனாஸாவும் இப்பூமியில்.....?
இரவோடு இரவாக சில நிமிடங்களே....?
அடுத்த சகோதரனுக்கு இடையூறின்றி சொற்ப நிடங்களே.......... "
கடந்த வாரம் பங்கொக் நகரில் நடந்த மாணிக்கக் கல் கண்காட்சில் கலந்து கொண்டு, திரும்பிவர நியமித்த தினத்திற்கு முதலே ஓடோடி வந்தாய் உண் இறுதிப் பயணத்திற்கு தயாராகத்தான் என்பதை நீயே அறிந்தாயோ ?
உண்வாழ்கையில் அனைத்துக்கும் அவசரப்படுவாய், அவசரமே உன் வாழ்கை தான் என்பதை இன்று தான் நாம் அறிகிறோம்..!
உன் துயரால் வாடும் உன் குடும்பம், உன் மனைவி மக்கள், உன் நண்பர்கள் ஊர்மக்கள் அனைவருக்கும் அந்த இரக்கமுள்ள இறைவன் பொறுமையை பரிசளித்தது உன்னை மேலான ஜன்னதுல் பிர்தவ்ஸில் சேர்ப்பானாக
ஆமீன்.
பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments