Ticker

6/recent/ticker-posts

Ad Code



புத்திசாலி எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வான்


ஒரு சிறைக் கைதிக்கு அவன் மனைவி கடிதம் எழுதி இருந்தாள்.....

"அன்புள்ள கணவருக்கு... நீங்கள் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானம் இன்றி தவிக்கிறோம் நம் வீட்டின் பின்னாடியுள்ள நிலத்தைப் பண்படுத்தி தோட்டம் அமைத்து  காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்"

 கைதி பதில் எழுதினான்...
" பின்னாலுள்ள நிலத்தில் கை வைக்காதே அங்கு தான் நான் கடத்திய தங்கக் கட்டிகளை புதைத்து வைத்துள்ளேன் நீ ஏதாவது செய்யப் போகப் பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்"

 ஒரு வாரத்துக்குப் பின் மனைவி கடிதம் எழுதினாள்...
 "அன்புள்ள கணவருக்கு... யாரோ ஒரு கூட்டத்தினர் இயந்திரங்களுடன் வந்து நம் கொல்லைப் புறத்தை  தோண்டி பாறைகளையெல்லாம்  அகற்றினர் இப்போது நிலம் சீராகி விட்டது ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே?"

 கைதி மனைவிக்கு மீண்டும் பதில் எழுதினான்.....
" அவர்கள் காவல்துறையினர் நான் உனக்கு எழுதிய கடிதத்தை  படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள் . ஆனால் உண்மையில் நான் தங்கம் ஏதும் புதைத்து வைத்திருக்கவில்லை இப்போது நீ இலகுவாய் தோட்டம் அமைத்து காய்கறி பயிரிடலாம் "

 புத்திசாலி எங்கிருந்தாலும் பிழைத்துக் கொள்வான்

அனுப்பியவர் ;
தேவிகா சிங்கப்பூர்


Post a Comment

0 Comments