Ticker

Ad Code



"மலர் தூவிட வா...!" | ஸ்ரீதேவி கணேஷன் | வேட்டை Ai SONG


2024ம் ஆண்டு இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் சிறப்புக் கவிஞர்களுள் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் கவிஞர் ஸ்ரீதேவி கணேஷன் அவர்களின் கவிதை ஒன்றினை செம்மைத்துளியான்' பாடல் வரிகளாக வடிவமைத்து , AI தொழில்நுட்பத்தின்  மூலம் வேட்டை தயாரிப்பில்  வெளிவந்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கேட்டு மகிழுங்கள் 

வேட்டை  
SONG: "மலர் தூவிட வா...!"
LYRICS:ஸ்ரீதேவி கணேஷன்
SONG FORM:SEMMAITHULIYAN
MUSIC:Ai
SINGER:Ai 
EDITOR:GALHINNAI NAIM
VTV(வேட்டை)

Email;vettai007@yahoo.com




Post a Comment

1 Comments

  1. மலர் தூவிட வா!

    உந்தன் காந்தக்குரலொலி
    எந்தன் காதுகளில் புகுந்து
    காவியமாய் தவழ்ந்ததுமே
    காம்பீரமாய்ப் புகுந்ததுவே!

    இளநெஞ்சம் கொஞ்சிடவே
    இசைத் தமிழை மீட்டி வந்து
    இமைப் பொழுதில் எந்தன்
    இதயத்தை வருடினாயே!

    ஆழ்மனதின் ஆசைகளை
    அச்சமறத் தூண்டியதில்
    அற்புதமாய் நின் நினைவு
    ஆதிமுதல் பதிந்ததுவே!

    அன்பே எந்தன் ஆருயிரே
    அழகு தரும் சித்திரமே
    ஆசைதனைக் கோர்த்தெடுத்து
    ஆதரவாய்த் தாலாட்டிடவா?

    நாத இசை போல உந்தன்
    நலினக் குரல் திசைமாறி
    நேசவிழிப் பார்வை தன்னில்
    நெகிழ்ந்து நானும் போனேனே!

    குதூகலம் என்னுள் இனி
    குடிகொண்டு விட்டதனால்
    இரவுதரும் கனவுகளால் - என்
    இதயமெங்கும் மலர் தூவிடுதே!


    ReplyDelete