
சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. தங்களது வீடியோக்களை வைரலாக்க பல விசித்திரமான விஷயங்களைச் செய்ய முயற்சி செய்கிறார்கள்.
உயிருக்கு ஆபத்தான ஸ்டண்ட், விபத்துகள் மற்றும் நாம் எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதேபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு இளம் பெண் ஷாப்பிங் செய்யும்போது, அவரது பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்ததால் கண்ணீர் விட்டு அழுதார். அதுமட்டுமின்றி, ஸ்மார்ட்ஃபோன் வெடித்தவுடன், அவரது பேண்ட்டில் தீப்பிடித்தது, அதை அறியும் முன், தீ மேலும் பரவியது.
இந்த சம்பவம் கடையில் இருந்த கேமராவில் முழுவதும் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலின்படி, இந்த வீடியோவானது பிரேசிலில் இருந்து வந்தது. வைரலாகும் இந்த வீடியோவில், ஒரு பெண் சூப்பர் மார்க்கெட்டில் அவசர அவசரமாக ஷாப்பிங் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.
இந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்தது. பின்னர், அந்தப் பெண்ணின் பின் பாக்கெட்டில் இருந்த போன் வெடித்தவுடன், ஜீன்ஸில் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்கிறார். இந்த திடீர் சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தன் பாக்கெட் தீப்பற்றி எரிவதை உணர்ந்த அந்த பெண்ணும், அவரது கணவரும் தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருக்கையில், அங்கும் இங்கும் ஓடத் தொடங்குகிறார். இந்த சம்பவத்தைச் சுற்றி இருப்பவர்கள் வியந்து, தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இத்துடன் வீடியோ முடிகிறது.
இந்த சம்பவத்தில் பெண் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கையின் படி, அவர் உடனடியாக ஆல்ஃபிரடோ அப்ராவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்த தீயினால் அவரது கை, முதுகு உள்ளிட்ட பகுதிகளும், தலைமுடியின் ஒரு பகுதியும் எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ @kiddaan என்ற X கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, பிரேசிலின் அனாபோலிஸ் நகரில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது, அவரது பின் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் வெடித்தது. இந்த போன் மோட்டோரோலா மோட்டோ E32 ஆகும். இது ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மோட்டோரோலா நிறுவனம், அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியது. மேலும், இந்த சம்பவத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறது.
ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன. லித்தியம்-அயன் பேட்டரிகள் பெரும்பாலும் இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாகின்றன. ஃபோன் அதிக வெப்பமடையும் போதும், சேதமடைந்த பேட்டரியை பயன்படுத்தும்போதும் அல்லது தவறான சார்ஜரைப் பயன்படுத்தும் போதும் இது நிகழலாம். நிபுணர்களின் ஆலோசனைப்படி, தொலைபேசியை பின் பாக்கெட்டில் வைத்திருப்பதை தவிர்க்கவும், அதிக வெப்பநிலையில் அதை பயன்படுத்துவதைக் குறைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments