உடல் நலத்தை பேணுவது எவ்வாறு என்று கருத்துக்களை குறித்தும்.உணவு, மற்றும் பழக்க வழக்கங்களை எவ்வாறு இயற்கையாக மாற்றுவது என்பதை குறித்தும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான தலைப்புகளின் கீழ் பார்த்து வருகின்றோம். சென்ற வாரம் நோய்களின் மூல காரணம் மலச்சிக்கல் என்பதைக் குறித்தும் அது எவ்வாறு களைவது என்பதை குறித்தும் பார்த்தோம்.
சரி இந்த வாரம் மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு உதவி செய்யக்கூடிய காய்கறிகளை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
காய்கறிகள் :
காய்கறிகளின் சிறப்பு என்று பார்த்தால் காய்கறிகள் "பாதுகாப்பு உணவு "அதாவது "ப்ரொடெக்டிவ் புட்" என்று கூறலாம் ஏனென்றால் உடல் நலனை கட்டி காக்கின்ற, உடலுக்கு நோய் வராமல் தடுக்கின்ற சக்தி காய்கறிகளுக்கும் கீரைகளுக்கும் இருக்கின்றது.
காய்கறிகளில் இரும்பு சத்தும் உயிர்ச்சத்துக்களும் மிகுந்து காணப்படுகின்றது தாது உப்புக்கள் / நார் பொருள் இவற்றில் அதிகமாக காணப்படுகின்றன .
பல வகையான காய்கறிகளில் தண்டு, இலை, சதை ,விதை ஆகிய ஒவ்வொரு பகுதியும் ஏதாவது ஒரு வகையில் நமது உடல் நலனுக்கு உதவுகிறது. காய்கறிகளில் உள்ள சதை பகுதி நமக்கு சக்தியையும் ,வைட்டமின்" பி "சத்துக்களையும் அதிகமாக தருகின்றது. விதைகளில் சர்க்கரை பொருட்களும் புரத பொருட்களும் கிடைக்கின்றன, இலைகள், தண்டு ,பழ பகுதிகள் ஆகியவற்றில் தாது பொருட்களும் உயிர் சத்துக்களும் நீரும் ஏராளமாக கிடைக்கின்றது. காய்கறிகளில் மருத்துவ குணங்கள் மட்டுமல்ல உணவை செரிக்கச் செய்யும் ஆற்றல் காய்கறிகளில் அடங்கி இருக்கிறது. காய்கறிகளில் காணப்படும் நார்ச்சத்து மலச்சிக்கல் குடல் நோய்கள், தோல், கண் வியாதிகள் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கின்றது.
நாம் காய்கறிகள் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை:
காய்கறிகள் தேர்ந்தெடுக்கும் பொழுது ,இயற்கையான நிறத்தோடும், அதிகம் வாடி இருக்காமலும், செயற்கையான உரங்கள் சேர்க்காமல் கிடைக்கக்கூடிய காய்கறிகளை பயன்படுத்த வேண்டும்.
எவ்வளவு புதிதான காய்கறிகள் கிடைக்கின்றதோ அந்த அளவுக்கு புதிதான காய்கறிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் அவற்றின் சத்துக்கள் இழக்காமல் புதிய காய்கறிகள் இருக்கும்.
காய்கறிகளை சமைத்து உண்ணும் பொழுது அவற்றில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
காய்கறிகளை சிறிது நேரம் கல் உப்பு சேர்த்த நீரில் இட்டு கழுவி உபயோகப்படுத்தலாம். இது காய்கறிகளில் தெளித்து இருக்கும் பூச்சிக்கொல்லிகளை அகற்ற உதவுகிறது.
காய்கறிகளை வேக வைத்த நீரை கலைந்து விடாமல் அவற்றை வேறு உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதுபோல காய்கறிகளை வேகவைத்த பிறகு தான் உப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் காய்கறிகள் வேகும் பொழுது சேர்க்கும் உப்பு அதன் சத்துக்களை அழித்து விடும்.
காய்கறிகளை வேக வைக்கும் பொழுது முடிந்தவரை அதிகமாக வேக வைக்காமல் குறைந்த நேரம் சிறிய தீயில் வேக வைக்க வேண்டும்.
காய்கறிகள் பழங்களைப் போல எளிதாக செரிப்பது இல்லை. ஆதலால் நோயாளிகளுக்கும் செரிமான குறைவு இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வயிற்றில் சிக்கல் உள்ளவர்களுக்கும் காய்கறிகளை நன்றாக வேக வைத்து கொடுப்பது சிறந்தது
அதுபோல காய்கறிகளை பெரிய துண்டங்களாக வெட்டி சமைக்கும் பொழுது அதனுடைய உயிர் சத்துக்கள் வீணாகாமல் நமக்கு கிடைக்கிறது
நமது உணவில் ஒவ்வொரு வேலையும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
எனவே நாம் காய்கறிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும். அதன் சத்துக்கள் எவ்வாறு வீணாக்காமல் முழுமையாக பெறுவது என்பதை குறித்தும் இந்த வார தொடரில் பார்த்தோம், மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments