அதை செய்யாமயே 197 அடிச்சோம் பாருங்க.. அவர் இந்தியாவுக்கு முக்கியம்.. பழைய பாண்டியா வந்துட்டாரு.. ரோஹித் பேட்டி

அதை செய்யாமயே 197 அடிச்சோம் பாருங்க.. அவர் இந்தியாவுக்கு முக்கியம்.. பழைய பாண்டியா வந்துட்டாரு.. ரோஹித் பேட்டி


ஜுன் 22ஆம் ஆன்ட்டிகுவா நகரில் நடைபெற்ற 2024 ஐசிசி  டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 2 சூப்பர் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 50, விராட் கோலி 38, ரிஷப் பண்ட் 36, துபே 34 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 146/8 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாந்தோம் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த வெற்றிக்கு 50 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் நிறைய தனிநபர் பேட்ஸ்மேன்கள் சதம், அரை சதமடிக்காமலேயே இந்தியா 197 ரன்கள் அடித்ததாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அதுவே  டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கான தாரக மந்திரம் என்று தெரிவிக்கும் அவர் பாண்டியா மீண்டும் பழைய பாண்டியாவைப் போல் விளையாடுவதாக பாராட்டி பேசியது பின்வருமாறு. 

“பேட்டிங்கில் ஆக்ரோசமாக விளையாடுவதை பற்றி தான் நான் நீண்ட காலமாக பேசி வருகிறேன். அது களத்திற்கு சென்று வேலையில் வெளிப்படுத்துவதாகும். இப்போட்டியில் நாங்கள் சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடினோம். இங்கே காற்று கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இங்கே பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்திலும் நன்றாக செயல்பட்டோம். அனைத்து 8 பேட்ஸ்மேன்களும் வேலை செய்ய வேண்டும்”

“இன்று ஒருவர் மட்டுமே 50 ரன்கள் அடித்தார். ஆனால் நாங்கள் 197 ரன்கள் குவித்தோம். கிரிக்கெட்டில் இப்படி சதம், அரை சதத்தை அடிப்பதை விட பவுலர்கள் மீது அழுத்தத்தை போடுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன். அனைத்து பேட்ஸ்மேன்களும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்தனர். அதைத்தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். ஹர்திக் பாண்டியா நன்றாக பேட்டிங் செய்வது எங்களை நல்ல நிலையில் வைக்கும்”

“டாப் 5 பேட்ஸ்மேன்களுக்குப் பின் நாங்கள் அவர் ஃபினிஷிங் செய்வதை விரும்புகிறோம். இன்று நமக்கு தெரிந்த பாண்டியா என்ன செய்வாரோ அதை செய்தார். அவர் எங்களுடைய மிகவும் முக்கியமான வீரர். அவர் இப்படி விளையாடுவது எங்களை நல்ல நிலைக்கு கொண்டு வரும். எங்களுடைய பவுலர்களுடன் விவாதித்தது நன்றாக வேலை செய்தது. நாங்கள் விவாதித்த விஷயங்களை அவர்கள் நன்றாக செய்தனர்” என்று கூறினார்.

crictamil


 



Post a Comment

Previous Post Next Post