கடலில் சிறுநீர் கழித்தால் ரூ.67,000 வரை அபராதம்... எங்கு தெரியுமா?

கடலில் சிறுநீர் கழித்தால் ரூ.67,000 வரை அபராதம்... எங்கு தெரியுமா?

ஸ்பெயினின் கடற்கரை நகரமான மார்பெல்லா கடலில் சிறுநீர் கழிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக அபராதம் விதிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது. மார்பெல்லா நகரம், தண்ணீர் தூய்மையை பாதுகாப்பதற்கான இந்த புதிய விதிமுறையை பரிசீலித்து வருகிறது.

கடலில் சிறுநீர் கழிக்கும் நபர்களுக்கு €750 (சுமார் ₹67,000) வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இதே செயலை அடிக்கடி செய்யும் குற்றவாளிகள் இன்னும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற செயலில் ஈடுபடும் அதே குற்றவாளிகள் மீண்டும் பிடிபட்டால் €1,500 (தோராயமாக ரூ.1 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விதிகள் குறித்து அப்பகுதி மக்களிடம் பல சந்தேகங்கள் வெளியாகி வரும்நிலையில், அரசு தரப்பில் சில விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரங்களில் நின்று கடலில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு இது பொருந்தும் என்றார். இப்படி விளக்கம் கொடுத்த பிறகும் மக்கள் இது குறித்து கேளிக்கைகள் கூறுவதை நிறுத்தவில்லை. இதனால், இது தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

எளிமையாகச் சொன்னால், புதிய விதியானது கடலில் சிறுநீர் கழிப்பது பற்றியது அல்ல, மாறாக கடற்கரையில் மோசமான நடத்தையை முற்றிலுமாக நிறுத்துவது ஆகும். 2004ஆம் ஆண்டில், கடற்கரையிலோ அல்லது தண்ணீரிலோ இத்தகைய நடத்தைக்காக மலாகா €300 (தோராயமாக ரூ.27,000) அபராதம் விதித்தனர். சமீபத்தில், காலிசிய நகரமான வீகோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே குற்றத்திற்காக €750 (தோராயமாக ரூ.67,000) அபராதம் விதித்தனர்.

இதுமட்டுமல்லாமல், ஸ்பெயினில் கடற்கரை தொடர்பான பல்வேறு குற்றங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதாவது கடற்கரையில் நிர்வாணமாக பிடிபட்டவர்களுக்கு €750 அபராதம் விதிக்கப்படும், அதே சமயம் தீ பற்றவைக்க முயற்சிப்பவர்களுக்கு €1,500 (சுமார் ரூ.1 லட்சம்) அபராதம் விதிக்கப்படும். மேலும், அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களுக்கு மிகப்பெரிய €3,000 (சுமார் ரூ.2 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18

Post a Comment

Previous Post Next Post