சுமேரியரின் நேரக்கணிப்பும், நாட்காட்டியும்!

சுமேரியரின் நேரக்கணிப்பும், நாட்காட்டியும்!


சுமேரியா உலகில் தோன்றிய நாகரிகங்களுள் சகல கூறுகளையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படுகிறது. யூப்பிரட்டீஸ், தைக்கிரீஸ்  நதிகளுக்குமிடைப்பட்ட பகுதியே மெசொப்பொத்தேமியா (இன்றைய ஈராக்) என அழைக்கப்படுகிறது.

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, மெசபடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள், நேரத்தை எவ்வாறு கணக்கிட வேண்டும், எவ்வாறு அளவிட வேண்டும்  என்பதில் புரட்சிகரமான முறை ஒன்றினைக் கண்டு பிடித்தனர். 

அவர்கள் 60 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஒரு அதிநவீன எண் முறையை உருவாக்கினர். இந்தத் தனித்துவமான அமைப்பு முறையே ஒரு மணிநேரத்தை 60 நிமிடங்களாகவும் ஒரு நிமிடத்தை 60 வினாடிகளாகவும் பிரிக்க வழிவகுத்தது; இதுவே இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

சுமேரியர்களின் துல்லியமான நேரக்கட்டுப்பாட்டின் தேவை அவர்களின் விவசாய சமூகத்தால் பெரிதும் மெச்சப்பட்டது.  பயிர்களை நடுவதற்கும்,  அறுவடை செய்வதற்கும் நாட்காட்டி அவர்களுக்கு அவசியமாயிற்று.  அவர்கள் தங்களின் விழாக்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்கு நாட்காட்டி வேண்டப் பட்ட ஒன்றாக இருந்தது.

சுமேரியர்கள் தங்கள் நேரத்தைக் கண்காணிப்பதற்கு உதவுவதற்காக, வானவியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்று அறிந்து கொண்டனர்.

அவர்கள் வானவியலின் இயக்கங்களை நுணுக்கமாகக் கவனித்து, அதன் அறிவைப் பயன்படுத்தி 12 மாதங்கள் கொண்ட சந்திர நாட்காட்டியை உருவாக்கினர், 
இதன் மூலம் அவர்கள், ஒரு நாளை 24 மணி நேரமாகவும், ஒவ்வொரு மணி நேரமும் 60 நிமிடங்களாகவும், ஒவ்வொரு நிமிடமும் 60 வினாடிகளாகவும் பிரித்து ஒரு மகத்தான சாதனையை உலகிற்கு விட்டுச் சென்றனர். இம்முறைகள் தன்னிச்சையானவையல்லாமல், நடைமுறை மற்றும் எளிதில் வகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது சுமேரியர் கணிதத்திலும் வானவியலிலும் கொண்டிருந்த மேம்பட்ட புரிதலைப் பிரதிபலிக்கிறது.

காலத்திற்கு ஏதுவான இந்த புதுமையான அணுகுமுறை, பாபிலோனியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் உட்பட பிற்காலத்தில உருவான  நாகரிகங்களில்  ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், பிற்காலத்தில் வந்தவர்கள் சுமேரிய முறையை ஏற்றுக்கொண்டு அதனை மேலும் மேம்படுத்தலாயினர்.  

சுமேரியர்களின் நேரக்கட்டுப்பாடு முறையின் பாரம்பரியம் நமது நவீன கடிகாரங்கள் மற்றும் நாட்காட்டிகளில் தெளிவாகத் தெரிகின்றது, இது நமது இன்றைய அன்றாட வாழ்விலும் கூட அவர்களின் புத்திசாலித்தனத்தின் நீடித்த செல்வாக்கை நிரூபிக்கின்றது!

செம்மைத்துளியான்




 



Post a Comment

Previous Post Next Post