Sleep Divorce பற்றி வெகு சிலரே கேள்விப்பட்டிருப்பார்கள், ஆனால் அது என்னவென்றே தெரியாமல் பின்பற்றுபவர்கள் ஏராளம். சரி இந்த ஸ்லீப் டிவோர்ஸ் என்றால் என்ன?, இதனால் கணவன் மனைவிக்கு என்ன நடக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
ஸ்லீப் டிவோர்ஸ் என்றால் என்ன?
ஸ்லீப் டிவோர்ஸ் என்பது வேறொன்றுமல்ல, தூக்கத்தை சரிப்படுத்த, அல்லது நல்ல முறையில் அமைதியாக தூங்க, கணவனும் மனைவியும் தனித்தனி அறையிலோ அல்லது தனித்தனி படுக்கையிலோ உறங்கினால் அதற்கு பெயர் தான் ஸ்லீப் டிவோர்ஸ். கணவன் மனைவி ஆகிய இருவரும் மனமொத்து இதை செய்வது பல நன்மைகளை தருகிறதாம்.
விருத்தசேதனம் செய்தால்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் காதலி.. புலம்பும் காதலன்!
அனைவருக்கும் தூக்கம் என்பது மிகவும் அவசியம், இது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. தூக்கமின்மை நம் உறவுகளை மட்டுமின்றி, நம் வாழ்வின் பல அம்சங்களை பாதிக்கிறது. ஒரு நபருக்கு போதுமான தூக்கம் இல்லாதபோது அவர்களால் நிச்சயம் சாதாரணமாக இருக்க முடியாது. அது, அவர் பிறரிடம் பேசும் விதத்தையும் கூட மாற்றுகிறது.
தூக்கமின்மையை உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் அது தெரியும். அது அவர்களுக்கு கோபம், மன அழுத்தம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். அது உறவுகளுடன், அல்லது வேலை செய்யும் இடங்களில் எரிச்சலடைய வைத்து, மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தான் சமீப காலமாக இந்த ஸ்லீப் டிவோர்ஸ் செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாம். கணவன்-மனைவிக்கு இந்த ஸ்லீவ் டிவோர்ஸ் பல நன்மைகளை அளிக்கின்றதாம்.
கணவன்-மனைவி ஆகிய இருவரும் எந்த இடையூறும் இல்லாமல் நன்றாக தூங்க இது வழிவகுக்கிறது. சில நேரங்களில் குறட்டை விடும் கணவன் அல்லது மனைவியிடம் இருந்து தப்பித்து நல்ல முறையில் தூங்கவும் இது பயன்படுகிறது. கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில், உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை எந்தவித இடையூறும் இல்லாமல் குறைக்க வழிவகுக்கிறது இந்த ஸ்லீப் டிவோர்ஸ்.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments