
கோவையில் ரேஸ்கோர்ஸ் கோ இந்தியா அரங்கத்தில் 16-10-2025 அன்று ஏவுகணை நாயகன் டாக்டர் APJ அப்துல் கலாம் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் 14 ஆவது ஆண்டு விழா சார்பாக நடைபெற்றது.
விழாவில் திருக்குறள் முரசு தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்களுக்குத் திருக்குறள் நெறியாளர் விருது ஐ, மேனாள் அமைச்சர் மற்றும் மேனாள் கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி அவர்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் தமிழாசான் முனைவர் அன்வர் பாட்சா ஏவுகணை நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா வாழ்வில் நடந்த மறக்க முடியாத மனிதநேய சம்பவத்தை நினைவு கூர்ந்து வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில், கோவை மாநகராட்சி மேனாள் மேயர் அவர்களுக்கும், தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் விஜயராகவன், சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் கவிஞர் பூ .அ. இரவீந்திரன் மற்றும் விழாவில் கலந்து கொண்ட சான்றோர்களுக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் நூல்கள், மற்றும் மனங்களை வென்ற மாநபி வாழ்க்கை வரலாறு நூல்கள் திருக்குர்ஆன் அறக்கட்டளை சார்பில் பரிசளித்தனர்.

அருகில் விழாத் தலைவர் இனிய தமிழகம் ஊடக நிறுவனத் தலைவர் திரு .இராஜேந்திர குமார், பேராசிரியர் அன்பு சிவா மற்றும் பலர்.
விழாவில் பல்துறை சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிரும், ஆண்களும் கலந்துகொண்டனர்.
இனிய தமிழகம் ஊடகத்தின் நிருபர் திரு. மணிவர்னன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments