Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஒன்பதாவது வருடத்தில் கால்பதிக்கும்"வேட்டை"!செம்மைத்துளியான்

 எழுத்தாளரும்,
கவிஞருமான செம்மைத்துளியான் 
அவர்களின் 
வாழ்த்துச்செய்தி!


"வேட்டை" மின்னிதழ் தனது எட்டாவது வருடத்தைப் பூர்த்தி செய்து, ஒன்பதாவது வருடத்தில் வெற்றிகரமாகக் காலெடுத்து வைப்பது சந்தோஷம் தருகின்றது!

மூன்று இலட்சம் பார்வையாளர்களைத்  தன்னகத்தே கொண்டுள்ள இச்சஞ்சிகை, இறுதி நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார்  10,000 ஆக்கங்களைப் பதிவிட்டுள்ளமை பெருமைப் படத்தக்க ஒரு விடயமாகும்.

கல்ஹின்னை மண்ணைத் தளமாகக் கொண்டதாக இச்சஞ்சிகை இருந்தபோதிலும், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இதற்கு சிறந்த பல எழுத்தாளர்களும், கதைஞர்களும், கவிஞர்களும் எழுதி வருவதும், சர்வதேச ரீதியாக தமிழ் பேசும் மக்கள் இதில் அவ்வப்போது பதிவாகும் ஆக்கங்களை ஆர்வத்தோடு பார்வையிட்டு வருவதும் மகிழ்சியைத் தருகின்றது!

அதுமட்டுமல்லாமல் இந்தியா எழுத்தாளர்கள்; குறிப்பாக தமிழ்நாட்டு எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் வேட்டை மின்சஞ்சிகைக்கு ஆக்கங்களை ஆர்வத்தோடு அனுப்பித் தருவதும், பிரதான வாசகர்களாக தமிழ் நாட்டவர் இருந்து வருவதும் பெருமைப் படத்தக்க விடயமாகும். 

அத்தோடு சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் எழுத்தாளர்களும் இச்சஞ்சிகையில் எழுதி வருவது, சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை சஞ்சிகை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்!

கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சந்தொட்டு, செயற்கை நுண்ணறிவு அறிமுகமானவுடனேயே, AI செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி,  "வேட்டை" மின்சஞ்சிகையில் செய்திகள், நேர்காணல்கள் மட்டுமல்லாது, பாடல்கள் பலவற்றையும்  AI மூலம் இசையமைத்தும், AI மூலமே பாடவைத்தும், பாடலுக்குரிய சலனப் படங்களை ஆங்காங்கே சேர்த்தும் YouTubeல் பதிவு செய்து வருவதன் மூலம் "வேட்டை"  துறைசார் வித்துவான்கள் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது!

ஒன்பதாவது வருடத்தில் காலடி வைக்கும் "வேட்டை", மேலும் பல சிறப்பான ஆக்கங்கள் திரட்டித்தர வல்லமை கொள்ள வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments