Ticker

6/recent/ticker-posts

விடுமுறைக்குச் சென்ற பின்னரும் வேலைக்குத் திரும்பச் சோர்வாக இருக்கிறதா?


வேலையிலிருந்து ஓய்வெடுக்கப் பலர் விடுமுறைக்குச் செல்வதுண்டு...

ஆனால் விடுமுறையை முடித்துவிட்டு வேலைக்குத் திரும்பும்போதும் புத்துணர்ச்சி பெறாமல் சோர்ந்துபோன உணர்வு தொடர்வது ஏன்?

வேலைச்சோர்வுடன் விடுமுறைக்குச் செல்பவர்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாக நார்த் கரோலைனா (North Carolina) பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜீனெட் M பென்னட் (Jeanette M Bennett) கூறினார்.

வேலைச்சோர்வு என்பது என்ன?

🧑‍💼 வேலையை நினைக்கும்போதே மலைப்பாக இருந்தால், வேலையில் எப்போதும் நம்பிக்கையற்ற மனப்பான்மையைக் கொண்டிருந்தால் அது வேலைச்சோர்வைக் குறிக்கிறது.

உங்களுக்கு வேலைச்சோர்வு ஏற்பட்டுள்ளதை எப்படி அறிவது?

🧑‍💼 செய்யும் வேலை ஊழியரின் கட்டுப்பாட்டில் இல்லாதபோது வேலைச்சோர்வு ஏற்படுகிறது.

🧑‍💼 அதனால் அவர்களுக்குத் திணறடிக்கும் உணர்வு, அளவுக்கு அதிகமாகக் களைத்துப்போன உணர்வு ஏற்படுகிறது.

🧑‍💼 அதன் விளைவாக வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் கவனம் செலுத்துவதில் அவர்கள் சிரமப்படுவதுண்டு.

🧑‍💼 வேலைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட நேரம் இருந்தாலும் அதற்குத் தேவைப்படும் சக்தியும் ஆர்வமும் இல்லாமல் போகலாம்.

விடுமுறைக்குப் பிறகு வேலைக்குத் திரும்புவதை எளிதாக்குவது எப்படி?

🧑‍💼 விடுமுறைக்குப் பிறகு வேலைக்குச் செல்வதற்கு முன்னர் ஒருநாள் வீட்டில் ஓய்வெடுக்கலாம். மனரீதியாக வேலைக்குத் திரும்புவதற்குத் தயார்ப்படுத்த அது உதவும்.

🧑‍💼 வேலையிடத்தில் மன உளைச்சல் எவ்வாறு உடலைப் பாதிக்கிறது என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்றவாறு சமாளிக்கும் முறைகளைக் கையாளலாம்.

🧑‍💼 தேவைப்படும்போது ஓய்வெடுக்கலாம்.

🧑‍💼 சக ஊழியர்களுடன் கலந்துரையாடி சமாளிக்கும் நடவடிக்கைகளைக் கையாளலாம், வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்ளலாம்.


seithi



 



Post a Comment

0 Comments