Ticker

6/recent/ticker-posts

உலகின் மிக நீளமான விஷ பாம்பு எது தெரியுமா..? ஆச்சர்யமளிக்கும் தகவல்!


ராஜநாகம் உள்ளிட்ட சில பாம்புகள் மற்ற பாம்புகளை சாப்பிடும் பழக்கத்தை கொண்டது. இதற்கு இருக்கும் கடுமையான விஷம் எளிதாக உணவு கிடைப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது. ஏனெனில், ராஜநாகம் உள்ளிட்டவற்றின் விஷம் மிகவும் கடுமையானது என்பதால், இதை விட பெரிய உயிரினங்கள் கூட இறந்துவிடுகின்றன. அவற்றை ராஜநாகம் உணவாக எடுத்துக் கொள்கிறது.

ராஜநாகம் உலகின் மிக நீளமான விஷ பாம்பு ஆகும். இது சுமார் 18 அடி நீளம் வரை வளர்கிறது. இது மிகவும் பயங்கரமான வேட்டை விலங்கு. இதன் மிகப் பயங்கரமான விஷம், பெரிய இரையைக் கூட எளிதாக வேட்டையாட உதவுகிறது. அத்துடன், மற்ற பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியிலும் ராஜநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாம்புகளின் தகவமைப்பு மற்றும் உயிர் வாழும் தந்திரங்களை கொண்ட ராஜநாகம் குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், சில நேரங்களில் ஒரே உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளும். அல்லது சிறைப்பிடிக்கப்பட்டால் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் அதற்கு மிகவும் பிடித்த உணவுகளை கூட ராஜநாகம் தவிர்த்து விடும்.

பொதுவான நேரத்தில் ராஜநாகம் எந்த வகையான பாம்பையும் உணவாக எடுத்துக் கொள்ளும். எதிரியின் மீது தனது விஷத்தை பாய்ச்சி வேட்டையாடிய பிறகு, அவற்றை ராஜநாகம் சாப்பிடும். சில நேரங்களில் நரமாமிசங்களை கூட ராஜநாகங்கள் சாப்பிடுகின்றன. எனவே, அதை பொறுத்தவரை தன்னைவிட பெரிய விலங்குகள், உயிரினங்களைக் கூட எளிதாக வீழ்த்தி இரையாக எடுத்துக் கொள்ள அதன் பயங்கரமான விஷம் ஒரு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது.

news18






 



Post a Comment

0 Comments