உலகில் பாதி நாடுகளை ஆண்ட நாடு... தற்போது 100% கடன்... நெருக்கடியில் திணறும் அவலம்

உலகில் பாதி நாடுகளை ஆண்ட நாடு... தற்போது 100% கடன்... நெருக்கடியில் திணறும் அவலம்

ஒரு காலத்தில் உலகில் பாதி நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்த நாடு தான் இங்கிலாந்து. லண்டனை தலைமையிடமாக கொண்ட இங்கிலாந்து தற்போது மிகப்பெரும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.

கடும் நிதி நெருக்கடி காரணமாக மற்ற நாடுகளிலிருந்து அதிகம் கடன் வாங்கும் நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் ரூ.1 லட்சத்து 52,304 கோடி கடனாக வாங்கியுள்ளது இங்கிலாந்து. இந்த தொகை கடந்த ஆண்டை விட ரூ.36,686 கோடி அதிகம் என பிரிட்டன் தேசிய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கடன் தொகை, இங்கிலாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% ஆகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான மதிப்பிற்கு இணையாக கடன் பெற்று வருகிறது இங்கிலாந்து. இந்த நிலையால் அங்குள்ள மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் சிலர் நாட்டை விட்டு வெளியேறவும் தயாராகி வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில், இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி ஆட்சியமைத்தது. இங்கிலாந்து பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்றார். இந்த சூழலில் தான் நிதி நிலைமை கவலை அளிக்கும் வகையில் அரசை வாட்டி வருகிறது,

நிதி நிலைமை இப்படி இருக்க, வரும் நிதி நிலை அறிக்கை மிகவும் கசப்பானதாக இருக்கும் என்றும், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 30ஆம் தேதி இங்கிலாந்து நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், மக்கள் கட்ட வேண்டிய வரி அதிகரிக்கும் என அந்நாட்டின் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மட்டுமின்றி, ஜப்பான் 250%, அமெரிக்கா 122%, என கிரீஸ், சிங்கப்பூர், இத்தாலி என உலகின் பல முன்னணி நாடுகள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியை விட 100 சதவீதத்திற்கும் மேல் கடன் வாங்கி வருகிறார்கள். அதேநேரம் இந்தியாவில் கடன்-நிகர உள்நாட்டு உற்பத்தி விகிதம் 57.1% ஆக இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

news18



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post