வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-60

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-60


305.வினா: அறிவுடையோர் முயலாத செயல் யாது?
விடை: ஆசைப்பட்டு உள்ள முதலை இழக்கும் செயல் 
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்.
(463)

306. வினா:கேடு எப்போது வரும்?
விடை" செய்யத்தகாத செயல்களைச் செய்யும் போது 
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.
(466)

307. வினா:ஒரு செயலை எப்படித் தொடங்க வேண்டும்?
விடை: பலமுறை எண்ணி ஒரு செயலைத் தொடங்க வேண்டும் 
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
(407)

308 வினா: பலர் துணையிருந்தும் முடியாத செயல் - 
விடை: திட்டமிடப்படாத உழைப்பு
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.
(468)

309. வினா:நன்மை கூட தவறாகி விடும் எப்போது?
விடை:அவரவர் பண்பறியாது செய்யும் நன்மை 
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை
(409)

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post