Ticker

6/recent/ticker-posts

Ad Code



அரசியல் கண்ணோட்டம்


ஜனாதிபதி தேர்தலில் வெல்லும் வேட்பாளர் பதவிப்பிரமாணம் செய்யும் போது வரும் சிக்கல்கள்.

மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை கொண்டுள்ள எதிர் கட்சியிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக தெரிவானால் ஏற்படக்கூடிய சட்ட ஏற்பாடுகள் என்ன?

யாப்பின் உறுப்புரை 31(4)(b) கூறுவதாவது புதிய ஜனாதிபதி சத்தியப் பிரமாணம் செய்து கடமையைப் பாரமெடுக்கும் வரை இருக்கின்ற ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்றுவார். 

யாப்பின் 38(2)(a), (b)(ii) கூறுவதாவது பாராளுமன்றத்தில் 113 எம்பிக்கள் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு,  பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி நாட்டின் கடமைகளை செய்ய தகுதியற்றவர் (Incapable of discharging his functions) என்று ஒரு Notice of resolution ஐ சபாநாயகருக்கு ஒப்படைத்து அதில் அவர் திருப்தி அடைந்து ஏற்றால் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவருக்கு யாப்பின் உறுப்புரை 70(1)(c) இன் படி பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்கிறது.

புதிய ஜனாதிபதி தேர்தல் ஆணையாளரால் பிரகடனம் செய்யப்பட்ட மறு கணமே இது நடைபெற்றால் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியாது போகும். 

இந்த 113 கையொப்பம் புதிய ஜனாதிபதிக்கு பிரதமரை நியமிக்க தேவையான பாராளுமன்ற பெரும்பான்மை இல்லை என்பதையும் நிரூபிக்கும். எனவே பிரதமரை நியமிக்காமல் வேறு எந்த அமைச்சரையும் நியமிக்க முடியாது. காரணம் பிரதமருடன் கலந்தாலோசித்தே ஏனைய அமைச்சர்களை நியமிக்க முடியும் என்று யாப்பின் உறுப்புரை 44(2) குறிப்பிடுகிறது.

மேலும் உறுப்பு ரை 31(4)(b), 42,43 ற்கு அமைவாக இருக்கும் தனது அமைச்சரவையை புதிய ஜனாதிபதி பதவியேற்க முதல் எந்நேரமும்  (கெபினட்) கலைக்க அல்லது நீக்க முடியும்.  இதற்கு ஒரு முன்னுதாரணமாக தற்போதைய ஜனாதிபதி அவரது அமைச்சரவையை உருவாக்க பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் அனைத்தினதும் ஒத்துழைப்பைக் ஆரம்பத்தில் கோரிய போது கள்வர்களுடன் நாங்கள் சேரத் தயாரில்லை என்று எதிர் கட்சிகள் அப்போது சொன்னதைக் காரணமாக காட்டலாம். அவ்வாறு அமைச்சரவையை நீக்கி விட்டால் புதிய ஜனாதிபதிக்கு புதிய அமைச்சரவையை உருவாக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இல்லை பெரும்பான்மை கட்சியின் ஆதரவும் இல்லை என்று ஆகிவிடலாம்.  இந்த நிலையில் புதிய ஜனாதிபதிக்கு இடைக்கால அரசாங்கம் இல்லாமல் நாட்டை 14 நாட்களுக்கு மேல் அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருக்க முடியாது என்று யாப்பின் உறுப்புரை 44(3) தெளிவாக கூறுகிறது. 
14 நாட்களுக்கு பிறகு நாட்டை எவ்வாறு புதிய ஜனாதிபதி ஆளுவார் என்று அவர் கூறவேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் சட்ட ரீதியான குழப்ப நிலை ஏற்படலாம். 

யாப்பின் உறுப்புரை 15 ற்கு ஏற்ப ஜனாதிபதியாக கதிரையில் இருப்பவரே நாட்டின் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, தேசிய பொருளாதார நலன் போன்ற அனைத்திற்கும் பொறுப்பு. எனவே புதிய ஜனாதிபதி தனது கெபினட்டை சட்ட ரீதியாக அமைக்க முடியுமான வழிவகைகளைக் காட்டவில்லையாயின் நாட்டில் குழப்பநிலை ஏற்பட புதிய ஜனாதிபதி நியமனமே காரணமாக அமையும் என்று கருதக்கூடிய நிலை இருக்குமாயின் மேற்கூறிய நாட்டின் பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், சட்ட ஒழுங்குகளைப் பேணுவது எல்லா மனித உரிமைகளையும் மீறிச் செய்யும் அளவுக்கு அவைகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உறுப்பு ரை 15 கருதுகிறது.

எனவே நாட்டின் நலன் கருதி புதிய ஜனாதிபதி நியமனம் தடுக்கப் படவும் வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும். உயர் நீதிமன்றம் யாப்பின் உறுப்புரைகளுக்கு அமைவாகவே தனது தீர்ப்பை வழங்கும் என எதிர் பார்க்க முடியும். நாட்டின் பாதுகாப்பு, அமைதி போன்றவைகளுக்கே நீதிமன்றம் முன்னுரிமை வழங்கி தனது தீர்ப்பை வழங்க வாய்ப்பிருக்கிறது. 

எனவே பாராளுமன்றத்தில் அதிகுறைந்த எண்ணிக்கையில் ஆசனங்களை வைத்திருப்பவர் ஏனைய கட்சிகளின் ஆதரவின்றி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியாது. அவ்வாறு ஆதரவுடன் அமைத்தால் இடைக்கால அரசாங்கத்தில் எதிர் கட்சி கெபினட்டின் அதிகாரம் செல்வாக்கு செலுத்தும். இந்நிலையில் ஜனாதிபதியின் கட்சிக்கு பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை ஒரு போதும் கிடைக்க வாய்ப்பில்லை. அந்த நிலை ஒரு உறுதியற்ற பல்கட்சி அரசாங்கத்தையே அமைக்க உதவும். இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் இன்னும் வீழ்ச்சி அடையவே வாய்ப்பு ஏற்படும். கள்ளர்களையும் பிடிக்க முடியாது ஊழலையும் கட்டுப் படுத்த முடியாது. நாடும் முன்னேறாது. இப்படியான ஒரு ஆபத்தான முடிவை எடுப்பது உசிதமானதா என்று சிந்திக்க நாட்டின் அனைத்து மக்களும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளார்கள். 

மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது அல்லது ஆணை வழங்குவது நாட்டின் சட்ட விதிகளுக்கு அமைவாக குழப்ப நிலைக்கு வழிவகுக்காத ஆட்சி அமைக்கவே தவிர நாட்டின் சட்ட விதிகளுக்கு எதிராக ஆட்சி அமைக்கவோ அல்லது குழப்பம் விளைவிக்கவோ அல்ல என்பதனையும் கவனத்தில் கொள்வது சிறந்தது.

நாட்டைப் பாதுகாப்போம், நாட்டின் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுப்போம். பொருளாதாரம் வீழ்ச்சி அடைய தூண்டப் படும் தேர்தல் முயற்சிகளைத் தவிர்ப்போம். 

தனி விருப்பு வெறுப்புகளை மறந்து நாட்டு மக்களையும் நாட்டையும் நேசித்து நாட்டை குழப்பாத முடிவுக்கு செல்வோம்.
மக்களால் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தாலும் யாப்பின் சிறப்பு உரிமைகளை மீறி செயல்பட முடியாது என்ற விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் யாப்பில் குறிக்கப்படுகின்ற விடயங்களை நிச்சயம் அறிந்திருப்பார்கள்

தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்களே!

தொகுப்பு
Deshbandhu Deshamani 
Vishwa keerti Lanka putra
GGl Jabeen Mohamed
RinTv founder and director



 Ai SONGS

 



Post a Comment

0 Comments