உங்களுக்குத் தேவையானதை ,உங்களைவிட அதிகம் தேவைப்படும் ஒருவருக்குக் கொடுங்கள்!

உங்களுக்குத் தேவையானதை ,உங்களைவிட அதிகம் தேவைப்படும் ஒருவருக்குக் கொடுங்கள்!


சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் பணிப்பெண் சாரா, பணக் கஷ்டம் காரணமாக உணவுக்கு பணம் செலுத்த முடியாத ஒரு தம்பதியரை ஓவர் டேபிளில் சந்தித்தார். 

விலை கம்மியான உணவுகளை பரிந்துரைக்கும்படி அவர்கள் அவளிடம் கேட்டார்கள், சாரா அவர்கள் சொன்னபடி கொடுத்தாள். 

அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, அவள் அவர்களிடம் ஒரு குறிப்பைக் கொடுத்தாள்:

"உங்களுக்காக, எனது தனிப்பட்ட கணக்கிலிருந்து உங்கள் உணவு கட்டணத்தைச் செலுத்தி விட்டேன். அதோடு எனது சிறிய உதவியாக இந்த 100 ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள், வந்ததற்கு நன்றி. - சாரா"

சாராவை ஆச்சரியப்படுத்தியது என்னவெனில், தனக்கு பணப் பிரச்சனைகள் இருந்தபோதிலும் இந்த உதவியால், அவள் மகிழ்ச்சியாக உணர்ந்தாள். 

கிட்டத்தட்ட ஒரு வருடமாக வாஷிங் மெஷினுக்கான பணத்தைச் சேமித்து வந்தாள். தன் தேவையை விட மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக அவளுடைய தோழி அவளைத் திட்டினாள்.

இதற்கிடையில், சாராவின் தாய் தொலைபேசியில் அழைத்து, "என்ன செய்தாய், சமூக வலைதளங்கள் உன் செயலைப் பாராட்டுகின்றன!" சாராவின் கருணை செயல் குறித்து இந்த ஜோடி பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது, அது வைரலானது.

சாரா தனது முகநூல் கணக்கைத் திறந்து பார்க்கும்போது , அவரைச் சந்திக்க விரும்பும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான குறுஞ் செய்திகள் வந்திருந்தன. 

அடுத்த சில நாளில், அவர் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, பின்வரும் பரிசு பொருட்களை பெற்றார்:

- ஒரு ஆடம்பரமான வாஷிங் மெஷின்.
- ஒரு நவீன தொலைக்காட்சி பெட்டி.
- எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.5,000 ஷாப்பிங் வவுச்சர்.
அவள் பெற்ற மொத்தத் தொகை ரூ.1,00,000 ஐத் தாண்டியது. தம்பதியரின் உணவுக்காக அவள் செலவழித்த 100 ரூபாய் காரணமாக அவள் வாழ்க்கை மாறியது.

உண்மையான தாராள உதவும் மனப்பான்மை என்பது உங்களுக்குத் தேவையில்லாத ஒன்றைக் கொடுப்பது அல்ல, ஆனால் உங்களுக்குத் தேவையானதை உங்களைவிட அதிகம் தேவைப்படும் ஒருவருக்குக் கொடுப்பதாகும். 

உண்மையான வறுமை என்பது மனிதநேயத்தின் வறுமை.

Ashok Ramanathan  
fb


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post