அந்தப் போட்டியில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் மந்தனா 5 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா 33 (22) ரன்கள் குவித்து அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஹேமலதா 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் யாஸ்திகா பாட்டியா நிதானமாக விளையாடி 37, ஜெமிமா ரோட்ரிகஸ் 35, தீப்தி சர்மா 41 ரன்கள் குவித்து அவுட்டானார்கள். இறுதியில் அருந்ததி ரெட்டி 14 ரன்கள் எடுத்தும் 44.3 ஓவரில் இந்தியா 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குறிப்பாக எந்த வீராங்கனையும் 50 ரன்கள் அடிக்காமலேயே இந்தியா 227 ரன்கள் குவித்தது.
இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இந்தியா தங்களுடைய அதிகபட்ச கோரை பதிவு செய்து தனித்துவமான சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2004ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அப்போதைய இந்திய அணி அரை சதமடிக்காமலேயே 207-7 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனை. அந்த 20 வருட சாதனையை இந்திய அணியினர் இன்று உடைத்தனர்.
நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக எமிலியா கெர் 4, ஜெஸ் கெர் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 228 ரன்களை துரத்திய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 40.4 ஓவரில் 168 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜார்ஜியா ஃபிலிம்மர் 25, லாரா டவுன் 26, மேடி க்ரீன் 31, ப்ரூக் ஹால்லிடே 39, எமிலியா கெர் 25* ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக ராதா யாதவ் 3, சைமா தாக்கூர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா புதிய டி20 சாம்பியன் நியூசிலாந்தை தோற்கடித்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதை வென்றார்.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments