அதிக கடன் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்; இந்தியாவின் நிலை?

அதிக கடன் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்; இந்தியாவின் நிலை?

தேசியக் கடனை வைத்து கணக்கிட்டால், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் $104,936 (தோராயமாக ரூ. 87 லட்சம்) கடன் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி தங்கள் பொருளாதாரத்தை நடத்தி வருகின்றன. உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் யுனைடெட் ஸ்டேட்சுக்கும் பெருமளவு கடன் இருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?. ஆம், ரூ.2,932 லட்சம் கோடி கடனுடன் அதிக கடன் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

சமீபத்தில், இந்த தகவலின் விவரங்கள் எக்ஸ் வலைத்தளத்தில் வேர்ல்டு ஆஃப் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் என்கிற பக்கத்தில் பகிரப்பட்டது. இதில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவின் தேசிய கடன் $35.41 டிரில்லியன் (தோராயமாக ரூ. 2,932 லட்சம் கோடி) என்பது தெரியவந்துள்ளது.
கிடைத்த தரவுகளின்படி, அமெரிக்க குடிமக்களும் தங்கள் தலைக்கு மேல் கடனைக் கொண்டுள்ளனர். தேசியக் கடனை வைத்து கணக்கிட்டால், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் $104,936 (தோராயமாக ரூ. 87 லட்சம்) கடன் உள்ளது. மறுபுறம், ஒவ்வொரு வரி செலுத்துபவரும் சுமார் $269,269 (தோராயமாக ரூ. 2.2 கோடி) கடனைச் சுமக்கிறார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கடன் கணிசமாக அதிகரித்துள்ளதாக சேகரிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டில், தேசியக் கடன் சுமார் 33.12 டிரில்லியன் டாலர்கள் (தோராயமாக ரூ. 2,764 லட்சம் கோடி)ஆக இருந்தது. அந்த நேரத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் $98,663 (தோராயமாக ரூ. 82 லட்சம்) கடன் இருந்தது, ஒவ்வொரு வரி செலுத்துபவருக்கும் $255,353 (தோராயமாக ரூ. 2.1 கோடி) கடன் இருந்தது.

2023ஆம் ஆண்டில் அதிக கடன் தொகை வாங்கியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், சீனா 14,692 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 123 லட்சம் கோடி) கடனுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் 2023ல் ஆண்டுக்கு 10,797 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 90 லட்சம் கோடி) கடனைப் பெற்றுள்ளது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து 3,469 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 29 லட்சம் கோடி) கடனைப் பெற்றுள்ளது.

பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவை முறையே 3,354 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 28 லட்சம் கோடி) மற்றும் 3,141 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 26 லட்சம் கோடி) ஆண்டு கடனுடன் 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ளன.

பகிரப்பட்ட தகவலின்படி, 2023இல் சுமார் 3,057 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 25 லட்சம் கோடி) கடனுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

news18




 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post