Ticker

6/recent/ticker-posts

பொதுத் தேர்தலில் இருந்து விலகுவதாக பாட்டலி அறிவிப்பு!

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணி போட்டியிடாது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தத் தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் நம்பிக்கையுடன் செயல்பட்டோம். 11 மாவட்டங்களில் வேட்பாளர்களை முன்வைக்க நாங்கள் தயாராக இருந்தோம்.ஆனால் வேட்புமனுச் செயல்பாட்டின் போது, ​​நியாயப்படுத்த முடியாத விதிமீறல் நடந்துள்ளது என்பதை உணர்ந்தோம்.

அதனால் இந்த தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளோம்" என்றார்.

adaderana



 



Post a Comment

0 Comments