Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலகெங்கும் ஆட்குறைப்புச் செய்யும் போயிங் ரக விமானம் நிறுவனம்

போயிங் நிறுவனம் உலகெங்கும் 17,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளது.

இதனால் போயிங் ஊழியர்களில் 10 விழுக்காட்டினர் பாதிக்கப்படுவர்.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் நிர்வாகிகள்,மேலாளர்கள் ஆகியோரும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஊழியர்களின் வேலை நிறுத்தம், விமானங்களின் தரம் மீது அக்கறை, முதலிய பிரச்சினைகளுக்கு இடையே போயிங் அந்நடவடிக்கையை எடுக்கிறது.

அமெரிக்காவில் சம்பள உயர்வு கேட்டு சுமார் 33,000 ஊழியர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்கின்றனர்.  

737 MAX, 767, 777 ரக விமானங்களின் தயாரிப்பு அதனால் தாமதம் அடைந்துள்ளது. 

777X ரக விமானங்களின் முதல் தொகுதி 2026-ஆம் ஆண்டில்தான் தயாராகும் என்று போயிங் விமான நிறுவனம் கூறியது.

nambikkai



 



Post a Comment

0 Comments