
இந்தநிலையில், ஜப்பான் மற்றும் சூடானுக்கான முன்னாள் தூதரான சஞ்சய் குமார் வர்மா ஒரு மரியாதைக்குரிய தொழில் தூதர் என்றும் அவர் மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியது மற்றும் அவமதிப்புக்குரியது என்று புதுதில்லி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சீக்கிய பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்ட விடயத்தில், தனது உயர்ஸ்தானிகர் மற்றும் பிற அதிகாரிகளை விசாரணை செய்வதாக ஒட்டாவா கூறியதை அடுத்து, புதுதில்லியில் உள்ள கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் உட்பட்ட ராஜதந்திரிகளை எதிர்வரும் சனிக்கிழமைக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா நேற்று கேட்டுக் கொண்டது.
அத்துடன், தற்போதைய நிலையில் இந்திய ராஜதந்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில்; கனேடிய அரசாங்கத்தின மீது நம்பிக்கையில்லை.
எனவே, கனடாவுக்கான தனது உயர்ஸ்தானிகரையும் இலக்கு வைக்கப்பட்ட அதிகாரிகளையும் திரும்பப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் இந்தியா அறிவித்தது.
இதற்கு மத்தியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட்டவர்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கனடா கேட்டுக்கொண்டது.
இதனையடுத்து, இந்திய அரசாங்கத்தின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கான ஆதாரங்களை தமது நாட்டு பொலிஸார் சேகரித்துள்ளதாக கூறியே, கனடாவும் இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட்ட 6 ராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது.
முன்னதாக, புதுடில்லியில் உள்ள கனடாவின் ராஜதந்திரியை நேற்று அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, கனடாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பிற அதிகாரிகளின் மீதான அடிப்படையற்ற இலக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருந்தது.
சீக்கிய தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் ஒட்டாவாவின் குற்றச்சாட்டுகளை இதன்போது இந்தியா வலுவாக நிராகரித்தது.
முன்னதாக, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் -- 1997 இல் கனடாவில் குடியேறி, 2015 இல் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர் -- இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட காலிஸ்தான் எனப்படும் தனி சீக்கிய மாநிலத்திற்காக அவர் போராட்டங்களை நடத்தி வந்தவராவார்.
பயங்கரவாதம் மற்றும் கொலை சதி குற்றச்சாட்டுக்களுக்காக அவர் இந்திய அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவராவார்.
இந்தநிலையில், அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஸ் கொலம்பியாவின் சர்ரேயில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கும் இந்திய முகவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ட்ரூடோவின் கனேடிய அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனினும், அதனை அபத்தமானது என்று புதுடில்லி நிராகரித்து வருகிறது.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments