Ticker

6/recent/ticker-posts

கடவுச்சீட்டு நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அநுர அரசு

இலங்கையில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோரப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும்.

விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தடையின்றி கடவுச்சீட்டினை வழங்குவதற்கு தேவையான கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுகள் மற்றும் அதிக கடவுச்சீட்டுகளை விலை மனுக்கோரல் நடைமுறையின்படி இறக்குமதி செய்ய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

அது தொடர்பான தீர்வு வெளியானவுடன் ஈ-பாஸ்போர்ட் வழக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று முதல் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கை வழமை போன்று நடைபெறும் என்றும், பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், இன்று காலையிலிருந்தே கடவுச்சீட்டு அலுவலகத்தில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நூற்றுக்கணக்கான பொது மக்கள் முன்பதிவு செய்வதற்காக நேற்று இரவிலிருந்தே காத்திருந்து தற்போது வரை நீண்ட வரிசையில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்றிலிருந்து கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பும் என்று அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாக வழமைக்குத் திரும்பலாம் என்றும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

tamilwin



 Ai SONGS

 



Post a Comment

0 Comments