வாழ்க்கை துணை தேர்வு செய்வதில் செய்யக்கூடாத தவறுகள்...!

வாழ்க்கை துணை தேர்வு செய்வதில் செய்யக்கூடாத தவறுகள்...!

வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்வது புதியதொரு தொடக்கம். ஆனால், உங்களின் இந்த ஒரு தவறு உங்கள் வாழ்க்கையையே மோசமாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் நாம் நம் வாழ்க்கைத் துணையை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் நம் மனைவியுடன் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இணைந்திருக்கிறோம்.  எனவே அந்த வாழ்க்கை துணை சரியாக இருப்பது மிகவும் முக்கியம். சிலர் கணவன் அல்லது மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது செய்யும் தவறுகளால், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது செய்யும் தவறுகள்

1. குடும்ப அழுத்தம்

நம் சமூகத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் உதவுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஒரு பையனோ அல்லது பெண்ணோ பெற்றோரின் அழுத்தம் காரணமாக தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. இதன் காரணமாக அவர்கள் தன்னைப் பிடிக்காத அல்லது முன்பின் தெரியாத நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்களின் வாழ்க்கை பிரச்சனை தொடங்குகிறது.

2. அவசரம்

வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் எப்போதும் அவசரம் காட்டவே கூடாது. அவசரம் என்பது பிசாசின் வேலை. துணையைத் தேர்ந்தெடுக்கும்போது இதை மனதில் கொள்ள வேண்டும். எந்தவொரு நபரையும் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள், ஏனென்றால் ஒரு சந்திப்பில் ஒருவரை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. தேவைப்பட்டால், அந்த நபரைப் பற்றிய தகவல்களைப் பெற நீங்கள் ஒரு பொதுவான நண்பரின் உதவியைப் பெறலாம்.

3. முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம்

ஆண், பெண் கலாசாரம் முற்றிலும் வேறுபட்டால் திருமணத்திற்குப் பிறகு பிரச்சனைகள் வரலாம், எனவே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முன், கலாச்சார வேறுபாடுகளுக்குப் பிறகும் அந்த நபருடன் வாழ முடியுமா இல்லையா என்பதை கவனமாக சிந்தியுங்கள், ஏனென்றால் இது உங்களுக்கு பின் நாளில் வருத்தத்தை கொடுக்கலாம்.

4. கவர்ச்சியின்மை

முதல் சந்திப்பில் பிடிக்கவில்லை என்றால் கூட பெற்றோர் சொன்ன காரணத்துக்காக ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள ஓகே சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த இடத்தில் கொஞ்சம் டைம் கேட்டு திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபருடன் பேசுவது நல்லது, ஓரிரு வாரங்களுக்குப் பிறகும் உங்களுக்கு முதல் சந்திப்பில் ஏற்பட்ட அதே உணர்வு இருந்தால் அவரை திருமணம் செய்து கொள்வது சிறப்பாக இருக்காது. ஒரு சில சந்திப்புகளில் உங்களுக்கு அவர் மீது இருந்த அபிப்பிராயம் மாறிவிட்டது என்றால், அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், எண்ணவோட்டம் மாறவில்லை என்றால் அந்த திருமண உறவுக்கு சிவப்பு சிக்னல் காட்டிவிட வேண்டியது நல்லது.

5. பிடிக்காதவரை திருமணம் செய்தல்

திருமணத்துக்கு முன்பு நெருங்கிய உறவினர்கள் எல்லோரையும் தெரிந்திருக்கும். அதில் சிலரை நமக்கு பிடிக்காமல் கூட இருக்கும். ஆனால், உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக பெற்றோர் எல்லாம் சேர்ந்து அவரை திருமணம் செய்து வைத்துவிடலாம் என முடிவெடுப்பார்கள். அந்த இடத்தில் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். பெற்றோருக்காக, உறவினருக்காக என .நினைத்து மவுனம் காத்துவிட்டால் திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை மோசமாகிவிடும். அப்போது, உங்களை திருமணம் செய்ய வற்புறுத்தியவர்கள் யாரும் உங்களுடன் இருக்கவே மாட்டார்கள். அப்படி இருந்தாலும் பொறுத்து வாழுமாறு அறிவுரை மட்டுமே கொடுப்பார்கள். அதனால் உங்கள் வாழ்க்கை என்பதை நினைவில் வைத்து இந்த விஷயத்தில் நீங்கள் முடிவெடுப்பது நல்லது. 

zeenews


 



Post a Comment

Previous Post Next Post