தேனியை உலுக்கிய சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கு.. இளைஞருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தேனியை உலுக்கிய சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கு.. இளைஞருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் எதிரே காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 22) என்ற இளைஞர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி பயந்துபோய் கத்தி அலறியுள்ளார். மேலும் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறுவதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளைஞர், சிறுமியின் ஆடையில் தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

சிறுமியின் ஆடையில் தீ பற்றி எரியவே சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வந்து பார்த்த பொழுது சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் சிறுமியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்கள் மற்றும் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞர் விஜயகுமார் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக குற்றவாளி விஜயகுமாருக்கு 2012 குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு சட்ட பிரிவு 9(M) மற்றும் 10ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு, சிறுமியை தீ வைத்து எரித்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை என இரு தீர்ப்புகளை நீதிபதி கணேசன் வழங்கினார்.

மேலும் சிறுமியை இழந்து பாதிப்புக்கு உள்ளான குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post