Ticker

6/recent/ticker-posts

லெபனான் மீதான தாக்குதல் : இஸ்ரேலை கண்டித்த அமெரிக்கா

ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 3 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்க (United States) பாதுகாப்பு அமைச்சர் நேரடியாக இஸ்ரேலிடம் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

லெபனான் (Lebanon) நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை மீதான தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.  

அதன்படி நேற்றிரவு (23.10.2024) லெபனான் நாட்டில் இஸ்ரேல் தீவிரமான ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

லெபனான் மீதான தாக்குதல் : இஸ்ரேலை கண்டித்த அமெரிக்கா | Us Expresses Deep Concern Over Lebanese Soldier

ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் லெபனான் நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் பரிதாபமாகக் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இந்தச் சம்பவத்திற்குக் கவலை வெளியிட்டுள்ளது.
 
லெபனான் பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்துவது ஆழ்ந்த கவலையைத் தருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் (Lloyd Austin) இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

லெபனான் இராணுவம் மற்றும் லெபனானில் உள்ள ஐநா அமைதிப்படை வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ஈரெஸ் எல்லை வழியாக காசாவுக்குள் மனிதாபிமான உதவியை அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்த லாயிட், அதேநேரம் அப்பாவி மக்களை இதில் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments