Ticker

6/recent/ticker-posts

MS Dhoni | சிஎஸ்கேவுக்காக விளையாடுவாரா... தோனி முடிவு எப்போது? - காசி விஸ்வநாதன் அப்டேட்!

தோனி வருகிற சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதியே கடைசி நாள். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்து கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தக்க வைக்கப்படுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வுபெறுவாரா என்பது குறித்த யூகங்களும், தகவல்களும் கடந்த சில ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தோனியின் முடிவு தெரியவரும் என்றார்.

மேலும், “UNCAPPED PLAYERS” விதிமுறை தோனிக்காக கொண்டு வரப்படவில்லை எனவும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார். சிஎஸ்கே அணியில் யார் விளையாடுவார்கள் என்பது ஏலத்திற்கு பின்னரே தெரியவரும் எனவும் காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

முன்னதாக, “சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை உள்ளது. ஆனால் அதுகுறித்து இன்னும் தோனி எங்களிடம் உறுதிப்படுத்தவில்லை. ‘அக்டோபர் 31-ம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன்’ என்று தோனி கூறியுள்ளார். எங்களுக்கும் அவர் சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்கிற ஆசையும், நம்பிக்கையும் இருக்கிறது.” என்று காசி விஸ்வநாதன் கூறினார்.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments