Ticker

6/recent/ticker-posts

சமூக ஊடகங்களில் 1 ரிங்கிட்டுக்கு ஆபாச வீடியோக்கள் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாகியுள்ளது


கோலாலம்பூர்:
சமூக ஊடகங்களில் 1 ரிங்கிட்டுக்கு ஆபாச வீடியோக்கள் விற்கப்படுவது சிறுவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி உள்ளது.

கடந்த காலங்களின் ஆபாசப் படங்கள்  இருண்ட வலைத் தளங்களுக்கு பின்னால் மட்டுமே மறைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் 1 ரிங்கிட்டுக்கு  மட்டுமே விற்கப்படுகின்றன.

இதனால் மலேசியாவில் உள்ள சிறுவர்கள் இந்த வீடியோக்களை மிகவும்  எளிதான முறையில் அணுகக்கூடிய ஒன்றாக உள்ளது.

அதே வேளையில் சிறுவர்களின்  ஆபாசப் படங்களைத் தயாரிப்பதற்கும் இது தூண்டுகோளாக அமைகிறது 

இது பிள்ளைகள் குழுவின் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த கவலைகளை எழுப்பியது.

பல மறைக்கப்பட்ட குழுக்கள், கணக்குகளை அவர்கள் அனைத்துலக, உள்ளூர் உள்ளடக்கம் என்று வெளிப்படையாக விளம்பரப்படுத்துவதை வெளிப்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

nambikkai



Post a Comment

0 Comments