தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சராக கம்பகா (Gampha) மாவட்ட சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சருமான முஹம்மட் முனீர் முலஃபர் (Muneer Mulaffer,) நியமிக்கப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர் சமூக ஒருங்கிணைப்பு துறைக்கு கபினட் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முஸ்லிம் அமைச்சர் எவரும் இல்லை
தற்போதைய அரசாங்கத்தில் இதுவரை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் எவரும் இருக்கவில்லை.
அந்த இடைவெளியை நிரப்புவதே புதிய நியமனத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அநுர அரசில் முஸ்லிம் அமைச்சர் எவரும் நியமிக்கப்டாததை அடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
ibctamil
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments