
இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற ஹாஜிகளுக்கு சொல்ல முடியாத அளவு துயரங்கள் கஷ்டங்கள் ஏற்பட்டதாக புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்த ஹாஜிகள் தெரிவித்தனர்.
இம்முறை ஹஜ் கடமையில் ஏற்பட்ட இவ்வாறான துயரங்கள் அனைத்திற்கும் ஹஜ் கமிட்டியே காரணமாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
எமது நாட்டில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் ஹாஜிகளுகான ஏற்பாடுகளை ஹஜ் கமிட்டி முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்து வருவது ஆரம்ப காலம் முதல் வழக்கவழக்கமாக உள்ளது.
கூடாரங்களை பெற்றுக் கொள்ளும் போதும், அது சம்பந்தமான ஏற்பாடுகளின் போதும் பல மாதங்களுக்கு முன்பே ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டு ஏற்பாடு செய்கின்றனர்.
இதன்போது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியவசிய சேவைகள் அனைத்தையும் பார்வையிட்டு அதற்கான ஏற்பாடுகள், குறை நிறைகளை நிவர்த்தி செய்து
அதற்கான ஏற்பாடுகள் சகலதையும் மேற்கொள்ளும்.
இந்நிலையில், இம்முறை ஹஜ்ஜில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் ஹஜ் கமிட்டியே ஆகும். இவர்களின் பொறுப்பை சரியான முறையில் இவர்கள் செய்திருந்தால் இம்முறை ஹாஜிகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
ஆகவே ஹஜ்ஜுக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் பிரதி அமைச்சரான முனீர் முளபர் அவர்கள் இதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இம்முறையை ஹஜ்ஜில் ஏற்பட்ட சில துரதிஷ்டவசமான நிலை பற்றி பாராளுமன்றத்தில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றிப் பேசியபோது, பிரதி அமைச்சர் எடுத்த நிலைப்பாடு வருந்தத்தக்கது.
அரச அனுஷரனைகளுடன் நடக்கும் மார்க்க விடயங்கள், சம்பந்தமான முஸ்லிம் விவகாரங்களில் ஏற்படும் பிற்போக்கானன நிலைமைகள் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறுவதற்கு முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற வகையில் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு.
இவ்வாறான பிழைகள் நடக்கும் போது அவர்களும் வாய்மூடி இருப்பது அவர்களின் பொறுப்பையும் நிறைவேற்ற தவறியவர்கள் என்ற நிலைமைக்கு அவர்களும் தள்ளப்படுவார்கள்.
அந்த வகையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவை பற்றி பாராளுமன்றத்தில் பேசியபோது இவை ஒரு அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டு இதை அரசியலாக மாற்ற முனைவது தவறாகும்.
ஹஜ்ஜுக்கு சென்று வந்த ஹாஜிகள் குறிப்பிட்ட நேரங்களில் அமல்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போனதையிட்டு மன வருத்தத்துடன் இருக்கும் இவ்வேளையில்,அங்கு அவ்வாறான துரஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும்,இவற்றை சுட்டிக்காட்டுவோரை அரசியலில் நுழைத்து அரசியலாக மாற்ற முனைவதும் ஒரு அழகான, பண்பான விடயம் அல்ல.
மேலும் பல லட்சங்களை கட்டணமாக செலுத்திய நிலையில், ஹஜ் கமிட்டியின் பிழையால் மக்களுக்கு ஏற்பட்ட அசவ்கரியங்களை
தியாகத்திற்கு ஒப்பிட்டு தப்பிச்செல்ல முனைவது கஷ்டங்களை அனுபவித்த ஹாஜிகளுக்கு மேலும் ஆத்திரத்தை யூட்டும் ஒரு செயலாகும்.
மாறாக இம்முறை ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவங்கள் அடுத்த முறை ஏற்பட வழி விட மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் நடந்த துக்ககரமான சம்பவத்தையிட்டு ஹாஜிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பேருவளை ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments