Ticker

6/recent/ticker-posts

ஊமைப் பெண்-2


மழை நின்ற பின்பும் 
மண்ணின் வாசம் போகவில்லை.
அவள் சென்ற பாதையின் நினைவும் அவனது மனதில் மறையவில்லை.ஊரின் 
எல்லை ஓரத்தில் ஒற்றை வீட்டின் ஜன்னலருகே  நின்றவள் அவள்.பேச முடியாத பெண்.

ஆனால்

அவள் கண்கள் மட்டும் கவிதை எழுதத் தெரிந்தவை.
அவன் தினமும் வந்தான்,ஏதோ காரணம் சொல்லி.
ஒரு நாள் பூ கொண்டு,மற்றொரு நாள் புத்தகம் கொண்டு,அவள் சிரிக்கவில்லை.

ஆனால்

அவள் விழிகள் மட்டும் அவனைப் பார்த்ததும் மெல்ல ஒளிந்தன…“உன் மௌனத்துக்குள்ளே எவ்வளவு காயம் இருக்கு?” என்று அவன் கேட்ட போது
அவள் பதில் சொல்லவில்லை.

கண்ணோரம் வழிந்த ஒரு துளி கண்ணீர் மட்டும்
அவளது வாழ்க்கை வரலாற்றை அமைதியாகச் சொல்லிவிட்டது. அந்த மாலை முதல் அவளின் மௌன மொழியை புரிந்துகொள்ள அவன் இதயம் கற்றுக்கொண்டது.


(தொடரும்)




 


Post a Comment

0 Comments