Ticker

6/recent/ticker-posts

குர்ஆனை தடைசெய்த மீளாய்வுக்குழு அத்தனை பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்ய வேண்டும்


சவுதி அரேபியாவினால் இலங்கை முஸ்லிம்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகளை, அரசியல்  சதியொன்றின் அடிப்படையில் குண்டு வைக்கப்பட்டதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, புனித குர்ஆன் உற்பட, மீளாய்வுக்குழு அங்கத்தவர்களின் கொள்கைக்கு மாற்றமான கருத்துக்களில் இருக்க்கூடிய   பல மார்க்க  அறிஞர்களின்,  மேலான கண்ணியமான பல  இமாம்கனின் மற்றும் மதபோதகர்களின்  நூல்கள் இலங்கைக்குள் வருவதை மீளாய்வுக்குழு என்ற பெயரில் ஒரு உலமாக்கள் குழு தடை செய்தது.

இவர்கனின் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை கருதி குர்ஆன்களை தடை செய்வதற்காக புனித குர்ஆன் மீது அப்பட்டமான அவதூறுகளும் பொய்களும் இவர்களால்
முன்வைக்கப்பட்டுள்ளன.

குர்ஆன் சம்பந்தமாக புத்தசாசன அமைச்சஅமைச்சின் 
07. 08. 2024  அன்று திகதியிடப்பட்ட   MBRCA/07/MUSLIM/QURANS என்ற தொடரிலக்க கடிதத்தின் பிரகாரம் ,

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகளில் 25000 அரபு மொழியிலான குர்ஆன் பிரதிகளில்  பிரதிகளில் மாத்திரமே முற்போக்குவாத கருத்துக்கள் (அந்தவாதி அதஹஸ் )இல்லை என்று மீழாய்வுக்குழு தமக்கு அறிவித்துள்ளதாகவும், அதன்படி 25000 அரபு மொழியிலான பிரதிகளை மாத்திரம் விடுவிக்குமாறும்"  சுங்கத் ததினைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஏனைய குர்ஆன்  பிரதிகளில் முற்போக்கு வாதம், தீவிரவாதம், விஷமக் கருத்துக்கள் அடங்கும் என்பதுதான் இவர்களின் மறைமுகமான கருத்தா  ?

புனித திருக்குர்ஆனுக்கு திருக்குர்ஆனுக்கு இவ்வாறான ஒரு அறிக்கையை வழங்கியது பற்றி இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மீளாய்வுக்குழு  குழு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் மீளாய்வுக்கு குழு அமைப்பின் நோக்கம் பற்றி  குறிப்பிடுகையில் ஐந்து வகையான அளவுகோல்கள் நோக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி

1. தூய மார்க்கத்தை தூய்மையான விதத்தில் விளங்கிக் கொள்வதை உறுதிப்படுத்துதல்.

2. இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

3. சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை உறுதிப் படுத்தல்.

4. கடந்த கால  நிகழ்வுகளை  முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக அவற்றைக் கருத்தில் கொள்ளுதல்.
 
5. முற்போக்குவாத,பயங்கரவாத, விஷமக் கருத்துக் கொண்ட நூல்களை இலங்கைக்குள் வருவதை தடை செய்தல்.

இந்த அளவுகோல் அடிப்படையில் மேற்கூறப்பட்ட விடயங்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் நூல்கள் தடை செய்யப்படும் எனவும் இவர்களின் அளவுகோலின் நோக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் இவர்களின் மேற்கூறப்பட்ட  கருத்துப்படி

1. இந்த குர்ஆன் தூய்மையான மார்க்கத்தை போதிக்கவில்லை.

2. இந்தக் குர்ஆன் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

3. சமூகத்தின் ஒற்றுமைக்கு இந்த குர்ஆன் தான் காரணம்.

4. கடந்த கால நிகழ்வுகளுக்கு  குர்ஆன் தான் காரணம்.

5. இக் குர்ஆனில் முற்போக்குவாத,
பயங்கரவாத, விஷமக் கருத்துக் உள்ளது.

மேலே கூறப்பட்ட இவர்கள், இவர்களின்  (Framework) 5 வகையான அளவுகோல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டிய காரணங்களை உற்று நோக்கும்போது,  இக்குர்ஆனில் இவர்கள்  மேலே குறிப்பிட்ட பட்டிருக்கும் 5 விடயங்களுக்கு இக்குர்ஆன் பாதகமாக உள்ளது என்ற கருத்தையே மறைமுகமாக தெரிவித்துள்ளனர்.
  
மேலும் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் நூல்களை High risk, low Riskஎன இரண்டு வகையாவகையாக அடையாளப்படுத்தியுள்ள இவர்கள், மனிதர்களால் எழுதப்பட்ட மௌலித் உட்பட இன்னும் பல நூல்களை low Risk என அடையாளப்படுத்தி  உள்ளதோடு, அல்லாஹ்வின் வார்த்தைகளாகிய புனித திருக்குர்ஆனை High Risk அதி பயங்கரமானவை, மக்களின் கண்களுக்கு வெளியிட முடியாதவை  என்ற கருத்துப்படும் வகையில் அடையாளப்படுத்தி உள்ளனர்.

இவற்றில் low risk வகையைச் சார்ந்த நூல்களை வெளியிட  இலகுவான அனுமதி வழங்கப்படும் எனவும்,High Risk    நீண்ட  ஆய்வுகளுக்கு பின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் இவர்களின் கருத்துப்படி அன்பளிப்பாக வழங்கப்பட்ட இக்குர்ஆன் பிரதிகளில் இவற்றிற்கு பாதகமான கருத்துக்கள் உண்டு.  அவை அதிபயங்கரமானது, என்பதுதான் இவர்களின் முடிவா ?

ஞானஸார தேரர் குர்ஆன் சம்பந்தமாக எந்த குற்றச்சாட்டை முன் வைத்தாரோ, அதை விட மோசமான  குற்றச்சாட்டையே புனித அல்குர்ஆன் மீது இவர்கள் சுமத்தி இருப்பது குர்ஆன் சம்பந்தமாக இவர்களின்  ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானஸார தேரர் குர்ஆனில் ஜிஹாத் சம்பந்தமான ஒரு விடயத்தை மாத்திரமே விமர்சனமாக முன்வைத்து விளக்கம் கோரினார். 

ஆனால் இந்த மீளாய்வுக்குழு ஞானஸார தேரர்  முன் வைத்ததைவிட பல படு பயங்கரமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

இவர்களின் ஆய்வுகளின் சாரம்சமாக
( Therefore the committee dicides to not  permit the importation of this  publication )

அதாவது வெளிநாட்டில் இருந்து தெரிவிக்கப்பட்ட குர்ஆன்  பிரதிகளை வெளியிடுவதற்கு குழு அனுமதி வழங்கவில்லை.என இவர்களின் குர்ஆன் சம்பந்தமான ஆய்வில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டிநாட்டின் அரசியல் யாப்பில் மத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் இவர்கள் அனுமதி வழங்கித்தான், இவர்கள் அனுமதி வழங்கும் குர்ஆன்களை மட்டும் முஸ்லிம் மக்கள் படிக்க அனுமதிக்கும் அளவுக்கு இவர்கள் யார் ? இவர்களுக்கு உள்ள சட்ட அங்கீகாரம் என்ன ?
புனித அல்குர்ஆனின் ஒரு எழுத்தை கூட மறுக்கின்றவன், அது சம்பந்தமாக அவதூறுகளை பரப்புகின்றவன் முஸ்லிம் என்ற வட்டத்திலிருந்து வெளியேறுகின்றான். இது மார்க்கத்தின் நிலைப்பாடாகும்

அந்த வகையில் புனித அல்குர்ஆனில் பயங்கரவாதம் உள்ளது,அது அதி  பயங்கரமானது என அறிக்கை சமர்ப்பித்துள்ள இவர்கள், முஸ்லிம்கள் சம்பந்தமான எந்த நடவடிக்கைகளுக்கும் தகுதியற்றவர்கள். இவர்களை புனித அல்குர்ஆனின், இஸ்லாத்தின் எதிரிகள், என்றைய மார்க்கம் கணிக்கின்றது.

உலகளாவிய ரீதியில்  கலிமாவை மொழிந்த எந்த முஸ்லிமும் அல்குர்ஆன் சம்பந்தமாக தப்பான கருத்துக்களை வெளியிட்டதில்லை. 

எனவே உலகளாவிய ரீதியில் எடுத்து நோக்கும் போது, புனித அல்குர்ஆனை அசிங்கப்படுத்தி அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து, அதிலும் மார்க்கத்தை கற்றறிந்த உலமாக்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்களில் இவர்கள் முதல் தரத்தில் அடங்குகின்றனர்.

மேலும் மாற்று மத சமூகங்கள் புனித அல்குர்ஆனை படித்து,  அதன் அதிசயங்களை அறிந்து,  அதனை வரவேற்று, அதற்கு  மறியாதையும், கெளரவமும் செய்யும் அதேவேளை,   மார்கத்தை கற்றறிந்த உலமாக்கள்,  ஒரு நாட்டில் குர்ஆனை தடை செய்வது இதுவே உலக வரலாற்றில்  முதல் தடவையாகும்.

இலங்கையில் ஞானஸார தேரர் போன்றவர்கள் குர்ஆன் சம்பந்தமாக பல விடயங்களை மீடியாக்களின் முன்னே வந்து கதைத்தபோதிலும்,  அதை ஒரு அரசியல் நோக்கமாகக் கொண்டு, அரசியல்  பின்னணியில்  நின்று கதைத்தார்களே தவிர, அதை மாற்று மத மக்கள் ஏற்றுக் கொள்ளவோ, இதற்காக கோஷங்கள் எழுப்பவோ, அல்லது.  குர்ஆன் தடை செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் செய்யவோ இல்லை.

சில இனவாதிகள் அரசியல் பின்னனியில் குர்ஆன் சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தியபோது, அச்சந்தர்பங்களில்  அவருக்குத் தேவையான விளக்கங்கள் பகிரங்கமாக மீடியாக்களின் மூலம் வழங்கப்பட்டதோடு, அத்துடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

முஸ்லிம் மக்களின் குர்ஆனின் பயங்கரவாதம் உள்ளது, இதில் ஜிஹாத் பற்றிய வசனங்கள் உள்ளது, இது தடை செய்யப்பட வேண்டும். அல்லது இது சம்பந்தமாக எங்களுக்கு போதிய விளக்கம் இல்லை என,  எந்த ஒரு சாதாரண, மாற்று மத குடிமகனோ இந்த  நாட்டில் அவ்வாறான ஒரு கருத்தையோ தெரிவிக்கவில்லை

குர்ஆனைப் பற்றி விமர்சிக்கும்  இனவாதிகள், ஒரு அரசியல் சதித்திட்டம் ஒன்றின்  அடிப்படையிலேயே  அவ்வாறான பிரச்சினைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை மாற்று மத மக்கள் விளங்கியிருந்தார்கள்.

அதேவேளை அல்குர்ஆனில் ஜிஹாத் பற்றி பேசப்படுகின்றது.  அந்த வசனங்களை அழிக்க வேண்டும், இதற்கான மேலதிக விளக்கம் தேவைப்படுகின்றது, ஆக இதை விளங்க இதற்கு ஒரு கைநூல் தேவை என்ற ஒரு சிந்தனைப் போக்கை இந்த மீளாய்வு குழுவே இவ்வாறான ஒரு கருத்தை மக்கள் மனதில் விதைத்தார்களே தவிர மாற்றுமத சமூகங்களால் அவ்வாறான ஒரு பிரச்சினை முன்வைக்கப்படவில்லை.

அரசியல் பின்னணி ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்டகுண்டுவெடிப்பை பயன்படுத்தி, குர்ஆனின் ஜிஹாத் பற்றிய வசனங்களை அந்நிய மக்கள் படித்தால் பிரச்சனை ஏற்படும், அதில் தெளிவில்லை, அதற்கு மேல்லதிக தெளிவு வேண்டும் என்ற ஒரு விஷமக் கருத்தை மக்கள் மத்தியில் இந்த மீளாய்வுக் குழுவே மக்கள் மனதில் ஏற்படுத்தினார்கள்.

இதைத் தவிர அரசியல் நோக்கங்களை அன்றி அல்குர்ஆன் பற்றி எந்த அன்னிய  பொது மகனும் தப்பான கருத்தையோ தப்பான சிந்தனையையோ, தப்பான விமர்சனங்களையோ வெளியிட்டதில்லை.

இவர்களால் தயாரிக்கப்பட்ட Framework பற்றி ஆராயும் போது, இவர்களுக்கு தேவையான கொள்கை, இவர்கள் பின்பற்றும் கொள்கை, இவர்கள் சொல்லும் மார்க்கம் மாத்திரமே இலங்கையில் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையிலே மிக மிக நுணுக்கமாக இது  தயாரிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாம் மார்க்கத்திற்கும் புனித அல்குர்ஆனுக்கும் மாத்திரம் இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடாது என முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி , அந்த ஆலோசனைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில், நாட்டின் எந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அறியாத வகையில், மிக மிக இரகசியமாக இவர்களால் இவ்வாறான ஒரு வரையறை கட்டமைப்பும் ( Framework ) அதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

இவர்களின் ஒரு கொள்கையை நாட்டில் நிலை நாட்டுவதற்காக  மீளாய்வுக் குழு என்ற பெயரில் குர்கனை பழிவாங்கியது  நியாயமாகுமா  ?

முஸ்லிம் மக்களே இவர்கள் யார் என்பதை இனியாவது சிந்தியுங்கள்.

இவர்களினால் தடை செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ள பெரும் பெரும் இமாம்களையும், பெரும் பெரும் அறிஞர்களின் பெயர்களையும் அவதானிக்கும் போது எதற்காக இதனை செய்தார்கள் என்ற இவர்களின் கொள்கை நோக்கங்கள். வெளிச்சத்துக்கு வருகின்றது.

மீளாய்வுக்குழு விரும்பாத நூலாசிரியர்கள், பெரும், பெரும் இமாம்கள் உட்பட 37 பெயரின் நூல்கள் இலங்கையில் தடை செய்யப்படடும் என இவர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். 37 அறிஞர்களின் நூல்களையும் தடை செய்வதற்கு, எந்த அளவுகோலின் அடிப்படையில் இவர்களை தடை செய்தார்கள், இந்த பெரும், பெரும் உளமாக்களின் மார்க் அறிஞர்களின்  நூல்களில் உள்ள பயங்கரவாதம், முற்போக்கு வாதம் என்ன என்பதை இவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  இவற்றை தடை செய்வதற்கு இவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன ?

அந்த இமாம்களினதும் அறிஞர்களினதும் முஹத்திஸ்கனிதும் நூல்களை தடை செய்யும் அளவுக்கு, இவர்களின் மார்க்க அறிவின் ஆழம் என்ன ?

இந்த வரையறை ( Framework)  மீளாய்வுக் குழுவால் தயாரிக்கப்பட்டதே.இவர்கள் தயாரித்த இந்த வரையறையை வைத்தவைத்தே இதை இலகுவாக்கித் தந்தால் நாம் குர்ஆனை வெளியிடுவோம் என அல்லாஹ் பொறுந்தாத திமிரான ஒரு வார்த்தையை பிரயோகிக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

இந்த நாட்டில் மாற்றுமத சகோதரர்களுக்கு குர்ஆனில் இல்லாத பிரச்சனை இவர்களுக்கு ஏற்பட்டது ஏன் ? 
இதன் பின்னணி என்ன ?

இந்தக் குர்ஆன்னை படிக்கக் கூடாது என கூறும் அளவுக்கு இந்த குர்ஆனில் உள்ள பயங்கரவாதம் 
என்ன ?

குர்ஆனை படிக்க கூடாது என்று சொல்லும் அளவுக்கு இந்த நாட்டில் இவர்கள் யார் ?

இவர்களுக்கு உள்ள அதிகாரம் என்ன ?
 
மார்க்கத்தில்  ஏகபோகம் பேசும் அளவுக்கு மார்க்கம் இவர்களின் குடும்ப சொத்தா ? 

அல்லாஹ்வின் வார்த்தைகளை  கட்டுப்படுத்தும் அளவுக்கு இவர்களின் புத்தி மிஞ்சி விட்டதா ?

புனிதமிக்க அல்குர்ஆன் மீது அப்பட்டமான பொய்களைச் சொல்லி,   தடை விதித்த இவர்கள்,  முஸ்லிம்கள் சம்பந்தமான, முஸ்லிம்களை பிரதிநிதப்படுத்தும் எந்த பதவிகளையும் வகிப்பதற்கு தகுதியற்றவர்கள்.

இஸ்லாமிய நூல்களுக்கான வரையறை கட்டமைப்பு என ஒன்றை அமைத்து இஸ்லாத்துக்கும் புனித குர்ஆனுக்கும் சேரு பூசிய மார்க்கத்தின் எதிரிகள் என்பதை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே மார்க்கம் மற்றும்  முஸ்லிம் சமூகம் தொடர்பான எந்தப் பதவிகளிலும் பதவி வகிக்க இவர்கள் தகுதியற்றவர்கள். அத்தனை  பதவிகளில் இருந்தும் இவர்களை ராஜினாமா செய்யும்படி முஸ்லிம் சமூகம், முஸ்லிம் அரசியல் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

பேருவளை ஹில்மி

 


Post a Comment

0 Comments